ரம்ஜான் ஸ்பெஷல் பிரியாணி செய்முறை | Ramzan Special Biryani in Tamil
உலகில் உள்ள அனைத்து இஸ்லாமிய நண்பர்களுக்கும் ரம்ஜான் தின நல்வாழ்த்துகள். இன்றைய பதிவில் ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ரம்ஜான் வந்தாலே அனைவருக்கும் நினைவில் வருவது பிரியாணி தான். அதுவும் பாய் வீட்டு பிரியாணி என்றால், வேண்டாம் என்று கூறாமல் அள்ளி அள்ளி சாப்பிடும் அளவிற்கு அவ்வளவு சுவையாக இருக்கும். ஒரு மாத காலம் நோன்பிற்கு பிறகு உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என அனைவருக்கும் பகிர்ந்தளிந்துவிட்டு சாப்பிடுவதாலோ என்னவோ தெரியவில்லை அவ்வளவு சுவையாக இருக்கும் பாய் வீட்டு பிரியாணி. முஸ்லீம் வீட்டு பிரியாணி போல மிகவும் சுவையாக பிரியாணியை அனைவரும் செய்ய வேண்டும் ஆசைப்படுவார்கள். அவர்களுக்காகவே இந்த ரம்ஜான் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருள்கள்:
- மட்டன் – 1 கிலோ
- பாஸ்மதி அரிசி – 1 கிலோ
- வெங்காயம் – 1/2 கிலோ
- இஞ்சி – 50 கிராம்
- நெய் – 5 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – சிறிதளவு
- முந்திரி – 100 கிராம்
- உலர் திராட்சை – 100 கிராம்
- பூண்டு – 50 கிராம்
- பச்சை மிளகாய் – 100 கிராம்
- மஞ்சள்தூள் – 1டீஸ்பூன்
- தக்காளி – 300 கிராம்
- கசகசா – 2 டீஸ்பூன்
- தேங்காய் பால் – 1/2 கப்
- தயிர் – ஒரு கப்
- மிளகாய்த்தூள் – சிறிதளவு
- கரம் மசாலா தூள் – 1 1/2 டீஸ்பூன்
- எலுமிச்சை பழம் – 1
- புதினா – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
பாய் வீட்டு பிரியாணி செய்முறை:
ஸ்டேப்: 1
மட்டனை நன்றாக கழுவி பெரிய பெரிய துண்டுகளாகநறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கில்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும்.
ஸ்டேப்: 3
சிறிதளவு தேங்காய் துருவலுடன் கசகசாவை சேர்த்து அரைக்கவும். பின் தக்காளி, புதினா, கறிவேப்பிலையையும் நறுக்கவும்.
ஸ்டேப்: 4
குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும், முக்கால் பங்கு வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி வந்த பிறகு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுதை சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
ஸ்டேப்: 5
அதன் பிறகு கறிவேப்பிலைத் தூள், மிளகாய் தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூளையும் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். மசாலாக்கள் நன்கு வதங்கி பச்சை வாசனை நீங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கி மட்டனை சேர்க்கவும்.
ஸ்டேப்: 6
அதன் பின் நன்றாக வதக்கி தயிரை ஊற்றி ஒரு முறை கிளறி விடுங்கள் பின் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இறுதியாக 1/2 கப் தேங்காய் பால் ஊற்றி குக்கரை மூடி சுமார் 15 நிமிடம் வேக வைக்கவும். சிறிது நேரம் கழித்து திறந்து கசகசா, தேங்காய் கலவையை போடவும்.
ஸ்டேப்: 7
அரிசியை கழுவி தண்ணீரை வடிகட்டி பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி அதில் அரிசியைப் போட்டு லேசாக கிளறிய பின் உப்பு போட்டு 2 லிட்டர் தண்ணீர் சேர்த்து அரிசியை வேகவிடவும். அரிசி வெந்ததும் இறக்கவும்.
ஸ்டேப்: 8
மீதமுள்ள வெங்காயம், திராட்சையை நெய்யில் வதக்கவும். முந்திரியை பொன்னிறமாக வறுக்கவும். ஒரு பெரிய பாத்திரத்தில் வேகவைத்த சாதத்தை சிறிதளவு கொட்டி அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை, புதினா, வதக்கிய வெங்காயம், முந்திரி, திராட்சையை பரவலாகக் கொட்டவும். எலுமிச்சை சாற்றை பிழிந்து விடவும். மட்டனை மேலாக பரபலாக இடவும்.
ஸ்டேப்: 9
இதைப்போல ஒன்றன்மீது ஒன்றாக 3 அடுக்குகளாக அடுக்கவும். பிறகு அதை ‘தம்’ கட்டி 10 நிமிடம் வைக்கவும். அவ்வளவு தான் சூடான சுவையான மட்டன் பிரியாணி ரெடி. இந்த ரம்ஜானுக்கு மட்டன் பிரியாணியை இப்படி ட்ரை செய்து பாருங்கள் நன்றி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |