வீட்டில் காய்கறி இல்லையா..? அப்போ இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

Advertisement

5 Minute Lunch Recipe

இன்றைய பதிவில் காய்கறிகள் சேர்க்காமல் ஒரு சுவையான லஞ்ச் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு இந்த மாதிரி ஒரு ரெசிபி செய்து கொடுத்து பாருங்கள். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபி செய்வதற்கு காய்கறி எல்லாம் தேவையில்லை. சுலபமான முறையிலேயே இந்த உணவை நீங்கள் செய்யலாம். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் காய்கறி சேர்க்காமல் மிகவும் ருசியான ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

5 Minute Lunch Recipe in Tamil: 

தேவையான பொருட்கள்: 

  1. வெள்ளை சாதம் – 1 கப்
  2. பெரிய வெங்காயம் – 3
  3. பச்சை மிளகாய் – 2
  4. கடுகு – 1/2 ஸ்பூன்
  5. சீரகம் – 1/2 ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு – 1/2 ஸ்பூன்
  7. வெள்ளை உளுந்து – 1/2 ஸ்பூன்
  8. கருவேப்பிலை – 1 கொத்து
  9. மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  10. கரமசாலா – 1/2 ஸ்பூன்
  11. மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்
  12. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
  13. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  14. கொத்தமல்லி – சிறிதளவு
வீட்டில் சமைத்த சாதம் மீதம் இருக்கிறதா அப்போ இந்த மாதிரி செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

செய்முறை:

ஸ்டேப் -1 

5 Minute Lunch Recipe in Tamil

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, வெள்ளை உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை போட்டு வதக்க வேண்டும்.

ஸ்டேப் -2 

5 Minute Lunch Recipe in Tamil

  • பின் அதில் பெரிய வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.

ஸ்டேப் -3 

5 Minute Lunch Recipe Tamil

  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரமசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் இவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஸ்டேப் -4 

5 Minute Lunch

  • எல்லாம் நன்றாக வதங்கியதும் அதில் நாம் எடுத்து வைத்துள்ள வெள்ளை சாதம் மற்றும் 1 ஸ்பூன் அளவு மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் கடைசியாக கொத்தமல்லி போட்டு இரக்க வேண்டும்.
  • அவ்ளோ தாங்க..! மிகவும் சுவையான லஞ்ச் ரெடி..! இதை நீங்களும் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

இதையும் படியுங்கள்=> மீதமுள்ள சாதத்தை இப்படி ட்ரை பண்ணி பாருங்க டேஸ்ட் சூப்பரா இருக்கும்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement