குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?

Aval Laddu Recipe in Tamil

அவல் லட்டு செய்வது எப்படி | Aval Laddu Recipe in Tamil..!

வணக்கம் நண்பர்களே… பொதுநலம்.காம் பதிவின் அன்பான நேயர்களே… இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு சுவையாக செய்வது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சுவையான உணவு பொருள் தான் அவல் லட்டு. அவல் என்றாலே அனைவருக்கும் ரொம்ப பிடிக்கும். அதிலும் அவல் வைத்து செய்யும் லட்டு என்றால் பிடிக்காது என்று சொல்ல முடியுமா..? வாங்க நண்பர்களே சுவையான அவல் லட்டு செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அவல் லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

  • சிகப்பு அல்லது வெள்ளை அவல் – 3 கப்
  • வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை – அரை கப்
  • முந்திரி பருப்பு – 10
  • திராட்சை – 10 
  • பால் – கால் கப் 
  • பாதம் – 10
  • துருவிய தேங்காய் – கால் கப்
  • நெய் – தேவையான அளவு
  • ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன் 

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ ரவை வைத்து ஸ்வீட் செய்வது எப்படி?

அவல் லட்டு செய்முறை:

Step:1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள முந்திரி, பாதம், திராட்சை மூன்றையும் நெய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

Step: 2

அதன் பின் 3 கப் சிகப்பு அல்லது வெள்ளை அவல் எடுத்து கொள்ளவும். அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து அவலை பொன்னிறமாக வறுத்து கொள்ளவேண்டும். பிறகு, துருவிய தேங்காயையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

Step: 3

பிறகு, ஒரு மிக்ஸியில் நீங்கள் வறுத்து வைத்துள்ள அவலுடன் ஏலக்காய் மற்றும் நாட்டு சர்க்கரை அதனுடன் துருவிய தேங்காயும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

Step: 4

பின் அரைத்து வைத்ததில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, பாதாம் மூன்றையும் அதனுடன் கலவையாக சேர்த்து கலந்து கொள்ளவும்.

Step: 5

பின் அந்த கலவையுடன் சிறிதளவு நெய் மற்றும் சூடான பால் கால் கப் சேர்த்து நன்றாக பிசையவும். அதனுடைய சூடு ஆறுவதற்குள் லட்டு போன்று உருண்டையாக பிடிக்கவும்.

அவ்வளவு தான் அனைவருக்கும் பிடித்த சுவையான அவல் லட்டு தயார்…

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal