குழந்தைக்கு மிகவும் பிடித்த கேக் பாப்ஸ் செய்வது எப்படி?

Advertisement

குழந்தைக்கு மிகவும் பிடித்த கேக் பாப்ஸ் செய்வது எப்படி?

cake pops recipe in tamil:- குழந்தைகளுக்கு கேக் என்றாலே விரும்பி சாப்பிடுவார்கள். இந்த கேக்கினை நாம் பேக்கரி கடைகளில் வாங்கி கொடுப்போம். இதனை வழக்கமாக எப்போதும் சாப்பிடுவதைப் போல ஒரே மாதிரியாக இல்லாமல் கேக் பாப்ஸ்களை செய்து உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள், மிக எளிமையாவும் வேகமாகவும் எப்படி கேக் பாப்ஸ்கள் செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Cake Pops Recipe in Tamil..!

தேவையான பொருட்கள்:

  1. பிளைன் சாக்லேட் கேக் – 200 கிராம்
  2. சாக்லேட் பிஸ்கெட் – ஒரு பாக்கெட்
  3. சுத்தமான தேன் – 2 அல்லது 3 ஸ்பூன்
  4. Dark Chocolate – 200 கிராம்
  5. Nutella – 4 டேபிள் ஸ்பூன்
  6. சாக்லேட் சிப்ஸ் – தேவையான அளவு
  7. கலர் ஸ்ப்ரிங்க்லர்ஸ் -தேவையான அளவு
  8. லாலிபாப் ஸ்டிக்ஸ் – தேவையான அளவு
அடுப்பில் கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

செய்முறை:-

ஸ்டேப்: 1

chocolate

ஒரு சுத்தமான பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 200 கிராம் பிளைன் சாக்லேட் கேக்கினை உதிர்த்து எடுத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

chocolate

பின் ஒரு பாக்கெட் சாக்லேட் பிஸ்கெட்டினை பவுடர் செய்து இதனுடன் சேர்க்க வேண்டும்.

பிறகு 4 டேபிள் ஸ்பூன் Nutella மற்றும் 2 அல்லது 3 ஸ்பூன் தேன் இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

 

இப்பொழுது பிசைந்த மாவை சிறு சிறு பந்துகளாக உருட்டி லாலி பாப் ஸ்டிக்கை எடுத்து அந்த பந்தில் சொருகி வைக்க வேண்டும்.

ஸ்டேப்: 4

பிறகு 200 கிராம் Dark Chocolate-ஐ அடுப்பில் மீதமனான சூட்டில் உருக்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உருட்டி வைத்துள்ள பந்துகளை உருக்கி வைத்துள்ள சாக்லேட்டில் முக்கி எடுக்க வேண்டும்.

ஸ்டேப்: 5

இந்த லாலிபாப் ஸ்டிக்கை பிரிட்ஜில் ஒரு மணி நேரம் வைத்து குளிரூட்டுங்கள்.

ஸ்டேப்: 6

cake pops recipe in tamil
cake pops recipe in tamil

இப்பொழுது குளிரூட்டிய சாக்லேட் ஸ்டிக்கை எடுத்து மறுபடியும் மெல்ட்டடு சாக்லேட்டில் முக்கி அதன் மேல் கலர்புல்லான ஸ்பிரிங்கிள்ஸ்ஸை தூவுங்கள். இப்பொழுது கேக் பாப்ஸ் தயார் தங்கள் குழந்தைகளுக்கு இப்பொழுது இந்த கேக் பாப்ஷை அன்போடு பரிமாறுங்கள்…

இனி வீட்டிலே செய்யலாம் ரெட் வெல்வெட் கேக்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement