கோவில் ஸ்டைல் தயிர் சாதம் செய்வது எப்படி? | Temple Style Curd Rice in Tamil

ஐயர் வீட்டு தயிர் சாதம் செய்வது எப்படி? | Iyengar Curd Rice in Tamil

வீட்டில் நாம் வித விதமாக வித்தியாசமாக சாதம், தொட்டுக்கை என்று செய்து கொடுத்தாலும் கோவிலில் கொடுக்கும் புளிசாதத்திற்கும், சர்க்கரை பொங்கலுக்கும், தயிர் சாதத்திற்கும் ஈடு இணையே கிடையாது என்று சொல்லலாம். குழந்தைகளுக்கு தயிர் சாதத்தை இந்த ஸ்டைலில் செய்து கொடுங்கள் தட்டில் ஒரு பருக்கை கூட இல்லாத அளவிற்கு சாப்பிட்டு முடிப்பார்கள். நம்முடைய வீட்டில் செய்யும் சமையலை மிகவும் எளிமையாக அதே சமயத்தில் சுவையாகவும் எப்படி தயிர் சாதம் செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

தயிர் சாதம் செய்வது எப்படி

 1. அரிசி – 1 கப்
 2. பால் – 1 கப்
 3. பட்டர் (White Butter) – 10-15g
 4. உப்பு – தேவையான அளவு
 5. பெருங்காய தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 6. இஞ்சி – ஒன்றரை டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 7. பச்சை மிளகாய் – ஒன்றரை டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
 8. Fresh Cream அல்லது பாலாடை – 2 டேபிள் ஸ்பூன்
 9. தயிர் – 6 டேபிள் ஸ்பூன்
 10. கேரட் – துருவியது
 11. மாதுளம் பழம் – தேவையான அளவு

தாளிப்பதற்கு:

 1. கடலை எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 2. சிவப்பு மிளகாய் – 4
 3. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 4. உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 5. கருவேப்பிலை – தேவையான அளவு (நறுக்கியது)
 6. கொத்தமல்லி – தேவையான அளவு (நறுக்கியது)

செய்முறை:

curd rice recipe in tamil

ஸ்டேப்: 1

Curd Rice Recipe in Tamil: முதலில் 1 கப் அரிசி எடுத்து அதனை கழுவி கொள்ளவும். பின் குக்கரில் அரிசியை போட்டு அதில் 1 கப் பால் சேர்க்கவும் (எந்த அளவிற்கு அரிசி எடுக்கிறீர்களோ அதே அளவிற்கு பால் ஊத்தவும்).

ஸ்டேப்: 2

Thayir Sadam Recipe in Tamil: பின் அதில் 3 கப் தண்ணீர் சேர்க்கவும் (1 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்). அதன் பிறகு 10-15g  பட்டர் (White Butter) சேர்த்து 6 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

ஸ்டேப்: 3

Thayir Sadam Seivathu Eppadi: ஆறு விசில் வந்த பிறகு 15 நிமிடம் அதை அப்படியே வைத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து அதில் தேவையான அளவு உப்பு, அரை டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள் சேர்க்கவும்.

ஸ்டேப்: 4

தயிர் சாதம் செய்வது எப்படி?: பின் அதில் நறுக்கிய இஞ்சி ஒன்றரை டேபிள் ஸ்பூன், பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்றரை டேபிள் ஸ்பூன் சேர்த்து கிண்டவும். அதன் பிறகு அதில் பட்டர் (White Butter) 50 கிராம் சேர்த்து கிண்டி எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 5

Iyengar Curd Rice in Tamil: தாளிப்பதற்கு ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றி அதில் 4 சிவப்பு மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.

கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு அதில் கருவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.

ஸ்டேப்: 6

தயிர் சாதம் செய்வது எப்படி? இப்போது நாம் செய்து வைத்திருக்கும் தயிர் சாதத்தில் கொத்தமல்லியை நறுக்கி தூவி விட்டு அதன் மேல் இந்த தாளிப்பை கொட்டவும். தாளிப்பை சேர்த்து இப்பொழுது நன்றாக மிக்ஸ் பன்னவும்.

ஸ்டேப்: 7

Thayir Sadam Seivathu Eppadi: மிக்ஸ் செய்த பிறகு 6 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கட்டி இல்லாதவாறு கிளறவும். பின்னர் அதில் 2 டேபிள் ஸ்பூன் Fresh Cream அல்லது பாலாடை சேர்த்து கிண்டவும் (Fresh Cream தேவைப்படுபவர்கள் மட்டும் சேர்க்கலாம்). தயிர் சாதம் தண்ணியாக வேண்டும் என்பவர்கள் அரை கப் பால் சேர்த்து கொள்ளலாம்.

தயிர் சாதத்தின் மேல் துருவிய கேரட் மற்றும் மாதுளம் பழத்தை சேர்த்தால் சுவையான கோவில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.

கோவில் பிரசாத ஸ்டைல் தேங்காய் சாதம் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்