ஏகாதசி குழம்பு செய்வது எப்படி? | Ekadasi Kulambu in Tamil

ekadashi kulambu in tamil

ஏகாதசி விரதம் சமையல் | Ekadasi Samayal in Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் ஏகாதசி குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். ஏகாதசியில் விரதம் இருப்பவர்கள் அதற்கு அடுத்த நாள் ஏகாதசி குழம்பு செய்து சாப்பிடுவது வழக்கம். இந்த குழம்பில் 21 வகையான காய்கறிகள் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவு சாமிக்கு படைக்கப்பட்ட பிறகு, ஏழை எளியவருக்கு படைத்துவிட்டு பிறகு ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சாப்பிட வேண்டும். வாங்க இப்பொழுது நாம் இந்த தொகுப்பில் ஏகாதசி குழம்பு செய்யும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் – Dwadasi Samayal in Tamil

 1. துவரம் பருப்பு – 200 கிராம்
 2. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 3. தக்காளி – 2 (நறுக்கியது)
 4. சின்ன வெங்காயம் – 2 (தோல் நீக்கியது)
 5. சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளை கிழங்கு, கருணை கிழங்கு, வாழைக்காய், வாழைத்தண்டு, கேரட், மாங்காய், அவரைக்காய், பூசணிக்காய், சுண்டைக்காய், பெரிய நெல்லிக்காய், அகத்தி கீரை, முள்ளங்கி – தேவையான அளவு (நறுக்கியது)
 6. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 7. மிளகாய் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
 8. உப்பு – தேவையான அளவு
 9. கொத்தமல்லி – தேவையான அளவு
 10. புளி கரைசல் – தேவையான அளவு
 11. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 12. கருவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை – Ekadasi Samayal in Tamil:

 • முதலில் 200 கிராம் துவரம் பருப்பை கழுவி விட்டு பின் அதை வேகவைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2 – ஏகாதசி விரதம் சமையல்:

 • பின் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் 2 நறுக்கிய தக்காளி, 2 சின்ன வெங்காயம் துண்டுகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
 • தக்காளி வதங்கிய பின் சர்க்கரைவள்ளி கிழங்கு, உருளை கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய், வாழைத்தண்டு, கேரட் இவற்றை தேவையான அளவு சேர்த்து பாதியளவு வேக வைக்கவும்.

ஸ்டேப்: 3 – Ekadasi Samayal in Tamil:

 • பாதியளவு வெந்த பிறகு மாங்காய், அவரைக்காய், பூசணிக்காய், சுண்டைக்காய், பெரிய நெல்லிக்காய், அகத்தி கீரை, முள்ளங்கி, கத்திரிக்காய், கொத்தவரங்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், புடலங்காய், முருங்கைக்காய், வாழைப்பூ ஆகியவற்றை சேர்த்து கிண்டி கொள்ளவும்.

ஸ்டேப்: 4 – Ekadasi Samayal in Tamil:

 • பின் அதில் அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 4 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். பின் அதில் தேவையான அளவு புளி கரைசல் சேர்க்கவும் (புளி கரைசலுக்கு பதிலாக நார்த்தங்காய் கரைசல் அல்லது எலுமிச்சை சேர்த்து கொள்ளலாம்).

ஸ்டேப்: 5 – ஏகாதசி விரதம் சமையல்:

 • பின் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதித்த பிறகு அதில் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். பின் இதனை தாளிக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெயை சூடாக்கவும்.
 • எண்ணெய் சூடான பிறகு 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். இந்த தாளிப்பை குழம்பில் சேர்க்கவும் இப்பொழுது சுவையான ஏகாதசி குழம்பு தயார்.
தேங்காய் பால் சாதம்
கோவில் பிரசாத ஸ்டைல் தேங்காய் சாதம் செய்வது எப்படி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்