ருசியான குளு குளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி..?

Elaneer Payasam Recipe in Tamil

Elaneer Payasam Recipe in Tamil

வணக்கம் அன்பான நண்பர்களே… இளநீர் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவார்கள். இளநீர் உடலுக்கு குளிர்ச்சியை தர கூடியது. அதுபோல இன்று நாம் சமையல் குறிப்பு பதிவில் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடிய இளநீர் வைத்து பாயாசம் செய்வது எப்படி.? என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். இந்த இளநீர் பாயாசம் செய்வதற்கு அதிக நேரம் தேவைப்படாது. அதுமட்டுமில்லமல் இது ஆரோக்கியமான உணவும் கூட. இந்த குளு குளு இளநீர் பாயாசம் எப்படி செய்வது.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வித்தியாசமான கற்றாழை பருப்பு பாயசம் செய்யும் முறை

இளநீர் பாயாசம் செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர் சேர்க்காத பால் – 2 கப்
  2. சர்க்கரை – 5 டேபிள்ஸ்பூன்
  3. இளநீர் துருவல் – 2 கப்
  4. பச்சரிசி மாவு – 1 ஸ்பூன்
  5. நெய் – தேவையான அளவு
  6. ஏலக்காய் – தேவையான அளவு
  7. முந்திரி – 5
  8. பாதம் – 5
  9. காய்ந்த திராட்சை – 5
  10. குங்கும பூ – தேவையான அளவு

இளநீர் பாயாசம் செய்முறை:

செய்முறை – 1

முதலில் இளநீர் தேங்காயை  உடைத்து கொள்ள வேண்டும். பின் இந்த இளநீரை துருவ வேண்டும். துருவி வைத்துள்ள தேங்காயை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும்.

செய்முறை – 2

பின் ஒரு கடாயில் தண்ணீர் சேர்க்காத பாலை மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

பால் நன்றாக காய்ந்த பிறகு நாம் அரைத்து வைத்துள்ள இளநீர் துருவலை கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டும் 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

செய்முறை – 3

பிறகு பால் நன்றாக கொதித்த  பின் அதில் 5 டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

செய்முறை – 4

பிறகு ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். அதில் முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் பருப்பு சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை – 5

பின் அதே கடாயில் 1 ஸ்பூன் பச்சரிசி மாவை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை பாலில் கலந்து விட வேண்டும். பச்சரிசி மாவு சேர்ப்பதால் பாயாசம் கெட்டியாக இருக்கும்.

செய்முறை – 6

பின் பாயாசம் நன்றாக கொதித்த பின் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் பாதாம் பருப்பு அதனுடன் தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் குங்கும பூ சேர்த்து இரக்க வேண்டும்.

அவ்வளவு தான் அனைவருக்கும் பிடித்த ருசியான குளு குளு இளநீர் பாயாசம் ரெடி..! 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!