கறி இல்லை காய் இல்லை ரோட்டுக்கடை பரோட்டா குருமா டேஸ்ட் சும்மா அள்ளும்..!

Parotta Empty Salna Recipe in Tamil

அனைவருமே நிறைய வகையான குருமா சாப்பிட்டிருப்போம். நிறைய வகையான காய்கறிகள் சேர்த்து சாப்பிட்டு இருப்பீர்கள். அல்லது கறி சேர்த்து குருமா சாப்பிட்டிருப்போம். அதில் ஒரு சுவை இருக்கும். ஆனால் சின்ன சின்ன கடைகளிலும் ரோட்டுக்கடைகளிலும் ஒரு குருமா வைப்பார்கள் அதன் சுவை தனி தான்.

அந்த குருமாவில் ஒன்றும் இருக்காது. அதில் காய்கறிகள் இருக்காது. அவ்வளவு ஏன் ஒரு கறி துண்டு கூட இருக்காது. ஆனால் அதில் இருக்கும் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும் அப்படி ஒரு டேஸ்ட் இருக்கும் அதேபோல் இன்று நாம் ஒரு ரோட்டுக்கடை குருமா வைப்பது எப்படி என்று தெரிந்துகொள்வோம் வாங்க..!

Parotta Empty Salna Recipe in Tamil:

parotta empty salna recipe

ஸ்டேப்: 1

முதலில் தேங்காய் ஒரு மூடி எடுத்து அத்தனை துருவிக்கொள்ளவும். அதன் கூடவே 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் கசகசா, 1 கை முந்திரி எடுத்துக்கொள்ளவும். இது நான்கு பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 2

parotta empty salna recipe

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் ஊறிக்கொள்ளவும் அது கொஞ்சம் சூடானதும்.

ஸ்டேப்: 3

அந்த எண்ணெயில் 2 பிரிஞ்சி இலை, 2 பட்டை, 4 ஏலக்காய், 4 லவங்கள், இது அனைத்தையும் ஒரு மூன்றையும் சேர்த்து கலந்துவிட்டு.

ஸ்டேப்: 4

பிறகு அதில் 2 பெரிய வெங்காயம் நறுக்கி அதில் சேர்க்கவும் இது குருமாவில் தனியாக தெரியாத அளவிற்கு நன்கு வதக்கவும்.

ஸ்டேப்: 5

வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் 2 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும் அதனுடைய பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.

ஸ்டேப்: 6

வதங்கியதும் 4 பச்சை மிளகாய் நீளவாக்கில் கீறி அதில் சேர்க்கவும் பிறகு அதில் ஒரு கொத்து கருவேப்பிலை. கொத்தமல்லி, புதினா சேர்த்து கலக்கவும்.

அதனை 2 முறை கலந்துவிட்டு  2 தக்காளி நறுக்கி அதில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 7

இந்த தக்காளி அனைத்து பொருட்களுடன் சேரும் அளவிற்கு வதக்கவும்.

இப்போது நன்கு வதங்கிய பின் அதில் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும். 1 டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்க்கவும், 1 டேபிள் ஸ்பூன் தனியா தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா இது அனைத்தும் சேர்த்து ஒரு முறை கலந்துவிடவும்.

ஸ்டேப்: 8

இப்போது குருமாவிற்கு தேவையான உப்பு போடவும். அதில் 250 லிட்டர் தண்ணீர் ஊற்றவும், இப்போது ஒரு முறை கலந்துவிடவும். பச்சை வாடை போகும் அளவிற்கு கொதிக்கவிடவும்.

இதையும் try பண்ணுக 👉👉 காய்கறிகள் இல்லாமல் சுவையான குருமா செய்யலாம்.!

ஸ்டேப்: 9

பின்பு ஒரு கிண்ணத்தில் 1.1/2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு எடுத்துக்கொள்ளவும். அதில் 50 ml அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து தனியாக வைக்கவும்.

ஸ்டேப்: 10

இப்போது அந்த கிரேவி வெந்திருக்கும் அதில் அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் போடவும். அதனுடன் 3/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்துவிடவும்.

ஸ்டேப்: 11

அது ஒரு முறை கொதித்த பின்பு அதில் நாம் கரைத்து வைத்துள்ள கடலை மாவு சேர்க்கவும். பின் மீண்டும் 3/4 லிட்டர் தண்ணீர் ஊற்றி கலந்திவிடவும், இப்போது இது வரை 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி விட்டோம்.

கடைசியாக கலந்துவிட்டு மூடி போட்டு மீடியம் தீயில் அடுப்பை வைத்து 20 நிமிடம் கொதிக்கவிடவும்.

கொதித்த பின் குருமா ரெடி அதில் ஒரு கொத்து கொத்தமல்லி தழை போட்டு கேஸ் அடுப்பை அணைத்து விடவும். மூடியை போட்டு மூடிவிடவும் பின்பு திறந்து பார்த்தால் தெரியும் கொத்தமல்லி குருமாவுடன் கலந்துவிடும்.

அவ்வளவு தான் ரோட்டுக்கடை குருமா ரெடி. இதில் உங்களுக்கு அசைவ சாப்பிடும் சுவை வேண்டுமென்றால் மசாலா போடும் அதில் அதில் சிக்கன் தூள் 1 டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளலாம்.

இதை செய்து சாப்பிடுங்கள் 👉👉 உங்கள் வீட்டில் சப்பாத்தியா? மறந்துவிட்டு எப்போது போல் குருமாவை வைக்காதிங்க இதை ட்ரை பண்ணுங்க

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil