பூண்டு பொடி செய்முறை..! Poondu Podi in Tamil..!
Garlic Powder in Tamil – ஹாய் பிரண்ட்ஸ் இன்னைக்கி நாம ஒரு அருமையான ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் பொடி எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பெரும்பாலும் வீட்டில் சமைக்க நேரம் இல்லாதபோ டக்குனு இந்த பொடியை சதத்த்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். அதே மாதிரி இட்டிலி, தொடை போன்ற உணவுகளுக்கும் இந்த பூண்டு மிளகாய் பொடி நல்ல சுவையை கொடுக்கும். ஒருமுறை இந்த செய்து சாப்பிடுங்க அப்படினா திரும்ப திரும்ப செய்து சாப்பிடணும்னு தொணிக்கிட்டே இருக்கும். சரி வாங்க பூண்டு பொடி எப்படி செய்யலாம், இதற்கு தேவைப்படும் பொருட்கள் என்னென்ன போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- பூண்டு – ஒரு கப் (உரித்து ஒன்று இரண்டாக இடித்து கொள்ளுங்கள்)
- மிளகாய் தூள் – இரண்டு டேபிள் ஸ்பூன்
- மல்லி விதை – இரண்டு டீஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- வெள்ளை எள்ளு – மூன்று டேபிள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பிலை தாளிப்பதற்கு – ஒரு கொத்து
- நல்லெண்ணெய் – 1/2 கப்
- கடுகு உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
பூண்டு பொடி செய்முறை | Garlic Powder in Tamil
ஸ்டேப்: 1
அடுப்பில் ஒரு அடி கனமான கடாயை வைத்துக்கொள்ளுங்கள். கடாய் சூடானதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து மல்லி, சீரகம் மற்றும் வெள்ளை எள்ளு ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.
ஸ்டேப்: 2
எள்ளு நன்கு வெடித்து பொரிந்து நன்கு வாசனையாக வரும் அந்த ஸ்டேஜில் அடுப்பை ஆப் செய்து வறுத்த கலவையை நன்கு ஆறவிடுங்கள். அதற்குள் நாம் பூண்டினை வதக்கி எடுத்து கொள்வோம்.
ஸ்டேப்: 3
அதற்கு அதே கடாயில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள், பின் இடித்த பூண்டினை எண்ணெயில் சேர்த்து நன்றாக வதக்குங்கள். பூண்டு நன்கு வதன்க்கு ஓரளவு கலர் மாறும் வரை வதக்க வேண்டும்.
ஸ்டேப்: 4
நன்கு ஆறவைத்து வெள்ளை எள்ளு, சீரகம், கொத்தமல்லி விதையை மிஷியல் இட்லி பொடி போல் அரைத்துக்கொள்ளுங்கள். ரொம்ப நைசாக அரைத்துவிட கூடாது. அதன் பிறகு வதக்கிய பூண்டு, மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் ஒருமுறை அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 5
இவ்வாறு அரைத்த பூண்டு மிளகாய் பொடித்தாய் ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளுங்கள். பின் ஒரு கடுகு உளுத்தம்பருப்பு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து இந்த பூண்டு மிளகாய் போடியில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான மற்றும் அருமையாக பூண்டு மிளகாய் பொடி தயார். ஒருமுறை உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம். நாவில் சுவை தாளம் போடட்டும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |