குழந்தைகளுக்கு இந்த மாதிரி நெய்சாதம் செய்து கொடுத்தால் போதும், அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள்

Advertisement

நெய் சாதம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் சமையல் பதிவில் சுவையான நெய் சாதம் எப்படி செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப் போகிறோம். பொதுவாக நெய் சாதம் என்றாலே எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள், அந்த வகையில் உங்கள் வீட்டில் உள்ள குழந்தை சாப்பிடுவதற்கு அடம் பிடித்தால் இந்த நெய் சாதத்தை செய்து கொடுத்தலே போதும், குழந்தைகள் அதிகமாவே விரும்பி சாப்பிடுவார்கள், இந்த நெய் சாதம் சாப்பிடுவதற்கு மட்டுமின்றி குழந்தைகளின் உடலுக்கு பல ஆரோக்கியங்களை தருவதற்கும் மிகவும் முக்கியமாக இருக்கிறது, எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த நெய் சாதத்தை செய்து கொடுங்கள், மேலும் இவற்றை எப்படி செய்யலாம் என்று நம் பதிவில் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.

குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்

நெய் சாதம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி – அரை கிலோ
  • நெய் – 150 மில்லி
  • சின்ன வெங்காயம் – ஒரு கப்
  • பட்டை-2
  • இலவங்கம்- சிறிதளவு 
  • ஏலக்காய்-2
  • பிரிஞ்சி இலை – 2
  • எண்ணெய் – 50 மில்லி
  • இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
  • தண்ணீர் – 650 மில்லி
  • பச்சை மிளகாய் (கீறியது) – 3
  • உப்பு – தேவையான அளவு

நெய் சாதம் செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அரிசியை நன்றாக கழுவிக்கொண்டு, அதை ஒரு 20 நிமிடம் ஊறவைக்க வேண்டும், அரிசி ஊறும் வரை தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு காய்கறிகளை நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்:2

அடுத்ததாக அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு கடாயை வைக்கவும், கடாய் சூடானதும்  அதில் எண்ணெய் சேர்க்க வேண்டும், எண்ணெய்யை சேர்த்த பிறகு நெய் சேர்க்க வேண்டும், அடுத்ததாக பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலையை அதில் சேர்த்து தாளிக்க வேண்டும்.

ஸ்டேப்:3

தாளித்த பிறகு பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலைகள் ஆகியவை பொன்னிறம் வந்ததும், அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும், வெங்காயம் வதங்கிய பிறகு அதில் இஞ்சு, பூண்டு விழுந்து சேர்க்கவும்.

ஸ்டேப்:4

இஞ்சு, பூண்டு வாசனை போகும் வரை வதக்கி கொண்டு அதில் கீறிவைத்த பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விடம், வதக்கிய பிறகு தண்ணீர் சேர்த்து கொத்திக்கவிடவும்,  அதன் பிறகு ஊறவைத்த  அரிசியை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

ஸ்டேப்:5

அரிசி வெந்து தண்ணீர் வற்றியதும், அடுப்பை மீடியம் தீயில் வைத்து தம் போடவேண்டும், சமையல் செய்த பாத்திரத்தின் மேல் 15 நிமிடம்  தோசை கல்லை வைத்து தம் போடா வேண்டும், தம் போட்ட பிறகு நெய் சாதத்தை ருசிக்க வேண்டியது தான், எனவே நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இதேபோல்  சுவையான நெய் சாதத்தை செய்து கொடுங்கள்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்

 

Advertisement