How to Make Birthday Cake at Home Without Oven in Tamil
கேக் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பிறந்தநாள் அன்று கேக் வெட்டி கொண்டாடும் பழக்கம் இந்த உலகில் பலருக்கும் இருக்கிறது. ஆகவே பிறந்தநாள் கேக் கடையில் வாங்கி வெட்டிக் கொண்டாடுவதை விட வீட்டிலேயே செய்து கொண்டாடுவது கூடுதல் மகிழ்ச்சி தரும். எனவே நீங்களே ஈசியாக செய்ய டிப்ஸ் இதோ..
தேவையான பொருட்கள்:
கேக் செய்வதற்கு தேவையானவை:
- பால் – 1 கப் அல்லது முட்டை – 3
- ஆயில் – 1/2 கப்
- வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
- மைதா மாவு – 1 கப்
- பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
- Cake Tin – 1
- Butter Sheet – 1
- கல் உப்பு அல்லது தூள் உப்பு – ஒரு கப்
Cherry Syrup செய்வதற்கு தேவையானவை:
- சர்க்கரை – 1/4 கப்
- தண்ணீர் – 1/2 கப்
- செர்ரி பழம் – தேவையானவை
அடுப்பில் கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..! |
கேக் கிரீம் செய்வதற்கு தேவையானவை:
- Whipping Cream – ஒரு கப்
- சர்க்கரை பவுடர் – 1/4 கப்
- Electric Beater அல்லது Whisk
செய்முறை:
How to Make Birthday Cake at Home ஸ்டேப்: 1
காச்சிய ஒரு கப் பாலில் 1/2 எமிச்சை பழத்தை பிழிந்து நன்றாக கலந்து விடுங்கள்.
பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் 1/2 கப் கோல்டு வின்னர் எண்ணெயை சேர்த்துக்கொள்ளுங்கள், அதன் பிறகு 1/2 கப் சர்க்கரை சேர்க்க வேண்டும், அதன் பிறகு 1/2 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்க வேண்டும், பிறகு நாம் தயார் செய்து வைத்திருந்த பாலினை சேர்க்க வேண்டும் (பாலிற்கு பதில் 3 முட்டைகளை சேர்த்து கொள்ளலாம்). இவை அனைத்தையும் சேர்த்து மிக்சியில் மீடியம் ஸ்பீடில் 5 நிமிடங்கள் நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
அரைத்த கலவையை ஒரு சுத்தமான பவுலில் மாற்றி கொள்ளுங்கள், பின் அதனுடன் ஒரு கப் மைதா மாவு, 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், இரண்டு ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டோரா கேக் செய்வது எப்படி? |
How to Make Birthday Cake at Home ஸ்டேப்: 3
பிறகு ஒரு Cake tin-ஐ எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் வெண்ணையை (Butter) நன்றாக தடவி கொள்ளுங்கள். அதன் பிறகு Butter sheet-ஐ வைத்து நன்றாக செட் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது தயார் செய்து வைத்துள்ள கலவையை கேக் டின்னில் சேர்க்க வேண்டும்.
ஸ்டேப்: 4
பிறகு குக்கரில் கல் உப்பு அல்லது தூள் உப்பு ஒரு லேயர் கொட்டி கொள்ளுங்கள், பின்பு அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து அதன் மேல் ஒரு சிறிய பாத்திரம் அல்லது ஷ்டாண்ட் வைத்து, அதன் மேல் இந்த கேக் டின்னை வைக்க வேண்டும். குக்கருக்கு பதில் நான்ஸ்டிக் பாத்திரத்தையும் பயன்படுத்தி கொள்ளலாம்.
How to Make Birthday Cake at Home ஸ்டேப்: 5
பின்பு பிரஷர் குக்கரை மூடி, குறைந்தது 30 முதல் 35 நிமிடங்கள் அடுப்பை மிதமான சூட்டில் நன்றாக வேகவைக்க வேண்டும்.
35 நிமிடங்கள் கழித்து குக்கரை திறந்து கேக் வெந்துவிட்டதா என்பதை ஒரு முறை சரிபார்க்கவும். அதற்கு ஒரு குச்சியை கேக்கின் உள் விட்டு எடுங்கள் கேக் குச்சியில் ஒட்டாமல் இருந்தால் கேக் நன்றாக வெந்துவிட்டது என்று அர்த்தம் அதுவே, கேக் குச்சியில் ஒட்டியிருந்தால் திரும்பவும் சிறிது நேரம் வேகவைக்கவும். பிறகு அடுப்பில் இருந்து இறக்கி, கேக் டின்னை மெதுவாக எடுக்க வேண்டும்.
ஸ்டேப்: 6
அடுத்ததாக செர்ரி சிரப் (Cherry Syrup) தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு சுத்தமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் 1/4 கப் சர்க்கரை, 1/2 கப் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் செர்ரி பழம் சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை நன்கு கரையும் வரை சூடுபடுத்தி அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளுங்கள்.
How to Make Birthday Cake at Home ஸ்டேப்: 7
பிறகு இன்னொறு பவுலை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் ஒரு கப் whipping cream சேர்த்து Electric beater அல்லது Whisk பயன்படுத்தி நன்கு கலந்து கொள்ளுங்கள் இவ்வாறு கலக்கும் போது 1/4 சர்க்கரை பவுடரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 8
தயார் செய்த கேக்கினை மூன்று லேயராக கட் செய்து கொள்ளுங்கள், பிறகு ஒரு சுத்தமான பிளேட்டை எடுத்து கொள்ளுங்கள் அவற்றில் சிறிதளவு தயார் செய்த கிரீமை வைத்து அதன் மேல் கட் செய்த ஒரு கேக்கினை வைத்து செர்ரி சிரப்பினை அப்ளை செய்ய வேண்டும், பிறகு கிரீமை கேக் முழுவதும் நன்றாக அப்ளை செய்து செர்ரி பழங்களை வைக்க வேண்டும்.
How to Make Birthday Cake at Home ஸ்டேப்: 9
மீதமுள்ள இரண்டு கேக் துண்டுகளையும் ஒன்றின் மீது ஒன்றாக இதே போன்று செர்ரி சிரப், கிரீம், செர்ரி பழங்களை வைத்து அப்ளை செய்து கேக்கினை தங்களுக்கு பிடித்த மாதிரி டிசைன் செய்து கொள்ளுங்கள்.
மேல் கூறப்பட்டுள்ள செயல் முறையை சரியாக செய்தால் சுவையான White forest cake ரெடி ஆகிடும்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |