வீட்டிலேயே பால் பவுடர் செய்வது எப்படி? How to make milk powder in tamil

How to make milk powder in tamil

வீட்டிலேயே பால் பவுடர் செய்வது எப்படி? How to make milk powder in tamil..!

how to make milk powder at home in tamil: வணக்கம் நண்பர்களே இன்று நாம் வீட்டிலேயே மிக சுலபமாக பால் பவுடர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக நாம் பால் பவுடரை ஸ்வீட் ரெசிபி, ஐஸ்கிரீம் ரெசிபி, கேக் ரெசிபி போன்றவற்றை செய்வதற்கு அதிகளவு பயன்படுத்துகின்றோம். இருந்தாலும் கடைகளில் பால் பவுடர் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றது. எனவே வீட்டிலேயே மிக எளிமையான முறையில் பால் பவுடர் செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

ஈஸியா பப்ஸ் செய்யலாம் வாங்க !!!

பால் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:

  • பால் – ஒரு லிட்டர்
  • சர்க்கரை – 100 கிராம்

பால் பவுடர் செய்முறை:-

how to make milk powder in tamil

How to make milk powder step: 1

அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாய் வைத்து அவற்றில் ஒரு லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதிக்கவிடுங்கள்.

பால் நன்கு கொதித்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு கரண்டியை பயன்படுத்தி பாலாடை படியாதவாறு நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

How to make milk powder step: 2

பாலானது பால்கோவா பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

How to make milk powder step: 4

பால்கோவா பதத்திற்கு வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறு சிறு துண்டுகளாக உதிர்த்துவிட்டு, 15 நிமிடங்கள் ஈரப்பதம் இல்லாதவாறு நன்றாக காயவிடுங்கள்.

ரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி?

How to make milk powder step: 5

பால் பவுடர் வீட்டிலேயே செய்வது எப்படி: பின் மிக்சி ஜாரில் காயவைத்த பால் துண்டுகளை சேர்த்து அதனுடன் 100 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்தெடுத்தால் பால் பவுடர் தயார்.

இப்பொழுது பால் பவுடர் தயார், கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் பால் பவுடரை வாங்குவதற்கு பதில், வீட்டிலேயே மிக சுலபமாக பால் பவுடரை தயார் செய்துவிடலாம்.

இவ்வாறு தயார் செய்த பால் பவுடரை நாம் செய்யும் ஸ்வீட் ரெசிபி, ஐஸ்கிரீம் ரெசிபி, கேக் ரெசிபி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.

இந்த பால் பவுடர் செய்ய ஆகும் நேரம் அதிகபட்சம் 45 நிமிடங்களே ஆகும்.

கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>சமையல் குறிப்புகள்