வாழை இலை இருந்தா போதும் நாவில் கரையும் ஹல்வா 10 நிமிடத்தில் செய்திடலாம்

Advertisement

How to Make Banana Leaf Halwa in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. எல்லாரும் கண்டிப்பாக கேரட் ஹல்வா, கோதுமை ஹல்வா, பீட்ரூட் ஹல்வா, பாதாம் ஹல்வா என்று பலவகையான அல்வாவை சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் வாழை இலையில் செய்த அல்வாவை சாப்பிட்டது உண்டா. வாழை இலையிலும் ஹல்வா செய்யலாம். இதனை சாப்பிடுவதினால் நமது உடலில் உள்ள அஜீரண கோளாறை குணப்படுத்தும், செரிமான மண்டலத்தை பலப்படுத்தும். சரி வாங்க இந்த வாழையிலை அல்வா செய்வது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  1. வாழையிலை – 1 (சிறிதலாக நறுக்கியது)
  2. கான்பிளவர் மாவு – ஒரு கப்
  3. சர்க்கரை – ஒரு கப்
  4. முந்திரி – 10
  5. நெய் – நான்கு ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇👇
சுவையான குலாப் ஜாமூன் அல்வா இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

வாழை இலை அல்வா செய்முறை – How to Make Banana Leaf Halwa in Tamil:

வாழையிலையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

பிறகு அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வாழை இலையை நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

அரைத்த வாழை இலை சாறை ஒரு பவுல் வடிகட்டி கொள்ளுங்கள். அதனுடன் மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.

பிறகு ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒரு கப் கான்பிளவர் மாவு, ஒரு கப் சர்க்கரை மற்றும் இரண்டு சிட்டிகை உப்பு சேர்க்கவும்.

பிறகு அதனுடன் வாழையிலை சாறு சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

மாவை நன்றாக கரைத்த பிறகு, அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரியை வறுத்து தனியாக ஒரு பிளேட்டில் எடுத்துக்கொள்ளுங்கள்.

முந்திரியை வறுத்து எடுத்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு கலந்து வைத்துள்ள மாவு கரைசலை சேர்த்து கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

கலவையானது மேல் படத்தில் காட்டியுள்ளது போல் நன்கு கெட்டி ஆகும் வரை கைவிடாமல் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

பிறகு வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி இரண்டு நிமிடம் கிளறி இறக்கினால் ஹல்வா தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement