Kumbakonam Kadappa Recipe in Tamil
இன்றைய சமையல் குறிப்பு பதிவில் ருசியான கும்பகோணம் கடப்பா எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் இட்லி, தோசைக்கு எத்தனையோ சட்னி சேர்த்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இந்த மாதிரி ஒரு கடப்பா செய்து சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. இந்த கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா நீங்கள் வீட்டிலேயே மிகவும் சுவையாக செய்யலாம். வாங்க நண்பர்களே கும்பகோணம் கடப்பா செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
கடப்பா செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு – 100 கிராம்
- உருளைக்கிழங்கு – 3
- துருவிய தேங்காய் – 1/2 கப்
- பூண்டு பற்கள் – 5
- பச்சை மிளகாய் – 6
- சோம்பு – 1 டீஸ்பூன்
- கசகசா – 1/2 டீஸ்பூன்
- பொட்டுக்கடலை – 3 டீஸ்பூன்
- பட்டை – 1
- கிராம்பு – சிறிதளவு
- பிரிஞ்சி இலை – 1
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- கருவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
கோலார் சட்னி.. இந்த சட்னிக்கி வெங்காயம் வேண்டாம்.. தேங்காய் வேண்டாம் 5 நிமிடத்தில் தயார் செய்திடலாம் |
கும்பகோணம் கடப்பா செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பின் ஒரு மிக்சி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், பூண்டு, கசகசா மற்றும் சோம்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -3
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
ஸ்டேப் -4
வெங்காயம் வதங்கிய பின் அதில் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
பின் அதில் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
ஸ்டேப் -6
பின் இதில் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து போட வேண்டும். பிறகு இதேபோல பாசிப்பருப்பையும் நன்றாக மாவு போல மசித்து இதில் சேர்த்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப் -7
அடுத்து அடுப்பை குறைத்து வைத்து 15 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இரக்க வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! இட்லி, தோசைக்கு ஏற்ற கடப்பா ரெடி..! இந்த மாதிரி கும்பகோணம் கடப்பா நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முள்ளங்கியில் சட்னியா புதுசா இருக்கே.! ட்ரை பண்ணி பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |