வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

வீடே மணக்க கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா செய்ய தெரியுமா..?

Updated On: November 24, 2022 12:27 PM
Follow Us:
kerala style chicken sukka in tamil
---Advertisement---
Advertisement

சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

ஹாய் சமையல் குறிப்பு நண்பர்களே..! சிக்கனில் நீங்கள் நிறைய ரெசிபி சாப்பிட்டு இருப்பீர்கள். சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், சிக்கன் கிரேவி, சிக்கன் தந்தூரி, சிக்கன்  இதுபோன்ற ஒரே மாதிரியான ரெசிபி சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் இன்றைய சமையல் குறிப்பு பதிவானது கொஞ்சம் புதுசா இருக்கும். வீடே மணக்க கேரளா சுவையில் சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொள்ள போகிறோம். வாங்க சிக்கன் சுக்கா செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ள பதிவை முழுவதும் படித்து பார்ப்போம்.

இதையும் படியுங்கள்⇒ சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்!!

சிக்கன் சுக்கா செய்ய தேவையான பொருட்கள்:

  1. சிக்கன்- 1 கிலோ 
  2. மிளகு- 1 1/2 ஸ்பூன் 
  3. கார மசாலா- 1 ஸ்பூன் 
  4. மிளகாய் தூள்- 3 ஸ்பூன் 
  5. மஞ்சள் தூள்- 1 ஸ்பூன் 
  6. மல்லித்தூள்- 1 ஸ்பூன் 
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 1/2 ஸ்பூன்
  8. பச்சை மிளகாய்- 4
  9. பெரிய வெங்காயம்- 3
  10. தக்காளி- 1
  11. எலுமிச்சை சாறு- 1/2 ஸ்பூன்
  12. உப்பு- தேவையான அளவு
  13. எண்ணெய்- தேவையான அளவு 
  14. கறிவேப்பிலை- சிறிதளவு 
  15. கொத்த மல்லி- சிறிதளவு

சிக்கன் சுக்கா செய்யும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் எடுத்துவைத்துள்ள சிக்கனை தண்ணீரில் சுத்தமாக அலசி வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய், தக்காளி மற்றும் பெரிய வெங்காயம் மூன்றையும் நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2 

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன் நிறமாக வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிக்கன் மற்றும் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்கள் இதை அனைத்தையும் சேர்த்து உங்களுடைய கைகளால் கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

அதன் பிறகு மசாலா கலந்து வைத்துள்ள சிக்கனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மீண்டும் அதை உங்களுடைய கைகளால் கலந்து 1/2 மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

1/2 மணி நேரம் களித்த பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், தக்காளி, சிறிதளவு வெங்காயம் மற்றும் 1 ஸ்பூன் சோம்பு இவை அனைத்தையும் போட்டு நன்றாக 10 வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

10 நிமிடம் களித்த பிறகு வதக்கிய பொருட்களுடன் மசாலா சேர்த்து கலந்து வைத்துள்ள சிக்கனை மற்றும் 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு அதில் போட்டு நன்றாக கரண்டியால் கிண்டி சிக்கனை 1/2 மணி நேரம் வேக விடுங்கள்.

ஸ்டேப்- 7

1/2 மணி நேரம் களித்து சிக்கன் நன்றாக வெந்து சிவந்த நிறத்திற்கு வந்தவுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்து சிக்கனை இறக்கி வைத்து விடுங்கள்.

அவ்வளவு தான் வீடே மணக்க சுவையான கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா தயார். சிக்கன் சுக்காவை இந்த மாதிரி ஒரு முறை வீட்டில் செய்து கொடுங்கள். அதற்கு பிறகு நீங்கள் சமைக்கும் சுக்காவை யாராலும் அடிச்சுக்க முடியாது.

இதையும் படியுங்கள்⇒ பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?

இதை சாப்பிட்ட ஒரே வாரத்தில் உடலில் உள்ள கொழுப்பு சரசரவென்று குறையும்.!