மீதமுள்ள இட்லியை வைத்து இப்படி கூட செய்யலாமா..?

Advertisement

மீதமுள்ள இட்லி என்ன செய்வது 

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் புதுமையான மற்றும் மிகவும் அருமையான ஒரு சமையல் குறிப்பு பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்னவென்றால் மீதமுள்ள இட்லியை வைத்து இட்லி முட்டை மசாலா செய்வது எப்படி என்பதை பற்றி தான். நமது வீட்டில் மீதமுள்ள இட்லியை யாரும் சாப்பிட விரும்பாமல் அதனை வீணாக்கிவிடுவார்கள்.

ஆனால் ஒருமுறை இந்த பதிவில் கூறியுள்ள ரெசிபியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் இதனை மீண்டும் மீண்டும் செய்து தருமாறு விரும்பி கேட்பார்கள். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Leftover Idli Recipe in Tamil:

masala idli recipe in tamil

முதலில் இந்த இட்லி முட்டை மசாலா செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. இட்லி – 20
  2. முட்டை – 2
  3. வெங்காயம் – 4
  4. தக்காளி – 2
  5. கடுகு – 1/2 டீஸ்பூன் 
  6. இஞ்சிப்பூண்டு விழுது – 1 டீஸ்பூன் 
  7. மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன் 
  8. மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் 
  9. கரம் மசாலாத்தூள் – 1 டீஸ்பூன் 
  10. கருவேப்பிலை – தேவையான அளவு 
  11. கொத்தமல்லி இலை – பொடியாக நறுக்கியது 
  12. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் 
  13. உப்பு – தேவையான அளவு 

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்திருந்த 20 இட்லியை நன்கு உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் நாம் எடுத்து வைத்திருந்த 4 வெங்காயம் மற்றும் 2 தக்காளி ஆகியவற்றை நன்கு பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் 1/2 டீஸ்பூன் கடுகு, தேவையான அளவு கருவேப்பிலை, 1 டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு விழுது, பொடி பொடியாக நறுக்கிய 4 வெங்காயம் மற்றும் 2 தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

சேர்த்த பொருட்கள் எல்லாம்  நன்கு வதங்கிய பிறகு அதில் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4 

மசாலா நன்கு வதங்கிய பிறகு அதில் நாம் எடுத்து வைத்திருந்த 2 முட்டையை உடைத்து ஊற்றி மசாலாவுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். முட்டை நன்றாக வதங்கிய பின்னர் அதனுடன் நாம் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதன் மீது பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்பிலிருந்து இறக்கி அனைவருக்கும் பரிமாறுங்கள.

இப்பொழுது நமது இட்லி முட்டை மசாலா  ரெடி வாங்க சுவைக்கலாம். இந்த இட்லி முட்டை மசாலாவை  நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.

இட்லி, தோசைக்கு பல சைடிஷ் ட்ரை பண்ணிருப்பீர்கள் ஆனால் இந்த மாதிரி ஒரு சைடிஷ் யாரும் ட்ரை பண்ணிருக்கமாட்டீங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil

 

Advertisement