நூடுல்ஸ் ரெசிபி இன் தமிழ் | Maggi Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே தினமும் ஒரே விதமான டிஷ் செய்து கொடுத்து வெறுத்து இருப்பீர்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் இன்று இந்த மாதிரியான டிஷ் செய்து சாப்பிட்டு பாருங்கள். நூடுல்ஸ் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடிக்கும். அதில் நிறைய புது புது விதமான டிஷ் செய்து பார்த்திருப்போம். அந்த வகையில் இன்று உங்களுக்காக நூடுல்ஸ் வைத்து Maggi Puff டிஷ் செய்வது எப்படி என்பதை பார்ப்போம் வாங்க.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான வெஜ் நூடுல்ஸ் செய்முறை |
தேவையான பொருட்கள்:
- நறுக்கிய வெங்காயம் – 1
- நறுக்கிய தக்காளி –1
- நூடுல்ஸ் –1
- பிரெட்- 3
- எண்ணெய் – தேவையான அளவு
- மிளகாய்தூள் –1/2 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மைதா – சிறிதளவு
ஒரே நிமிடத்தில் சுவையான பீட்சா ரெசிபி |
நூடுல்ஸ் செய்முறை:
ஸ்டேப்: 1
- முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றவும் பின் அதில் நறுக்கிய ஒரு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
ஸ்டேப்: 2
- வெங்காயம் வதங்கியதும் அதில் நறுக்கிய தக்காளியை போட்டு நன்கு வதக்கவும்.
ஸ்டேப்: 3
- அதனுடன் நூடுல்ஸ் மசாலாவை அல்லது சிக்கன் மசாலாவை போடவும். பின் அதனுடன் உப்பு மற்றும் 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கிய பின் அதில் தண்ணீர் சேர்க்கவும்.
ஸ்டேப்: 4
- தண்ணீர் கொதித்த பின் அதனுடன் நூடுல்ஸை பாதியாக உதிர்த்து அதில் போடவும்.
ஸ்டேப்: 5
- நூடுல்ஸ் ரெடி ஆன பிறகு அதனை எடுத்து வைத்துக்கொள்ளவும். பின் மைதாவை எடுத்து சிறிது தண்ணீர் ஊற்றி கலக்கி வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 6
- பிறகு பிரட்டை எடுத்து நான்கு சதுரமாக நறுக்கிக்கொள்ளவும். பின் வெள்ளை நிறமாக உள்ள பிரட்டை எடுத்து அதன் மீது செய்து வைத்த மைதா தண்ணீரை நான்கு பக்கவும் தடவவும்.
ஸ்டேப்:-7
- மைதா தண்ணீரை தடவி அந்த ப்ரெட்டின் மீது நூடுல்ஸை வைக்கவும் வைத்து அதனை சுருட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 8
- சுருட்டி எடுத்து வைத்த பிரட்டை கடாயில் எண்ணெய் ஊற்றி மிருதுவான தீயில் வைத்து அதில் பிரட்டை போட்டு இரண்டு பக்கமும் Fry செய்துகொள்ளவும்.
- கடைசியாக தக்காளி சாஸ் வைத்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பரான சுவையாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |