குழந்தைகளுக்கு பிடித்த மால்புவா செய்வது எப்படி?

மால்புவா செய்முறை

மால்புவா செய்முறை விளக்கம் (Malpua Recipe In Tamil)..!

மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த, மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். அந்த வகையில், இன்று நாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த மால்புவா செய்து கொடுக்கலாம்.

சத்து மாவு செய்முறை அதன் பயன்கள் மற்றும் சத்து மாவு ரெசிபிஸ்..!

மால்புவா (Malpua Recipe In Tamil) செய்ய தேவையான பொருட்கள்:-

  • 1 கப் மைதா
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் ரவை
  • 1/2 கப் துருவிய பன்னீர்
  • 1 கப் சர்க்கரை
  • 1 கப் தண்ணீர்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • 1/2 தேக்கரண்டி பருப்புகள்
  • 1 டீக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1 டீக்கரண்டி ஏலக்காய் தூள்
இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை.

மால்புவா செய்வது எப்படி?

மால்புவா செய்முறை (Malpua Recipe In Tamil):

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் சர்க்கரை மற்றும் அதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, இவற்றை நூல் தன்மை அடையும் வரை பாகு காய்ச்ச வேண்டும்.

பின்பு ஒரு பெரிய கிண்ணத்தில் மைதா, கோதுமை மாவு, ரவை, பன்னீர், பெருஞ்சிரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.

மால்புவா செய்முறை:-

பின்பு அதில் சக்கரைப் பாகினை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும். குறிப்பாக கலவையானது கட்டிப்படாமல் இருக்க வேண்டும்.

இந்த மாவு நடுத்தர நிலையில் இருக்க வேண்டும். இவை வறண்டு காணப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

மால்புவா செய்முறை:-

இந்த கலவையை 3-4 மணிநேரம் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெயை ஊற்றிக் கொண்டு, அதன் மீது கலந்து வைத்துள்ள மாவை பரப்பி ஊற்றவும். மாவனது ஒருபக்கம் வெந்தவுடன் மறுப்பக்கம் வேகவைத்து எடுக்கவும்.

பிறகு அதன் மேல் வறுத்த முந்திரி, பிஸ்தா போன்றவற்றை தூவி குழந்தைகளுக்கு அன்புடன் பரிமாறவும்.

குதிரைவாலி தோசை செய்முறை விளக்கம்..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!