Mango Bar Recipe in Tamil
தினமும் நமது பதிவின் மூலம் மிகவும் அருமையான மற்றும் மிகவும் ருசியான சமையல் குறிப்புகளை அறிந்துகொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் 90’s கிட்ஸ் ஸ்பெஷல் Mango Bar வீட்டிலேயே செய்வது எப்படி..? என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம்.
உங்களுக்கும் இந்த Mango Bar பிடிக்கும் என்றால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ரெசிபியை அறிந்துகொண்டு அதனை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த Mango Bar-யை வீட்டிலே செய்து சுவைத்து பாருங்கள். சரி வாங்க நண்பர்களே Mango Bar-யை வீட்டிலே செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Chewy Mango Bars Recipe in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- மாங்காய் – 3
- சர்க்கரை – 3/4 கப்
- உப்பு -1/2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 மாங்காவையும் நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு அதனின் தோல்களை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=>மிகவும் ருசியான நெல்லிக்காய் மிட்டாய் செய்வது எப்படி..?
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து அதனுடனே 2 கப் தண்ணீரையும் சேர்த்து நன்கு வேகவைத்து மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அதனை மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் வேகவைத்து வடிகட்டி வைத்துள்ள மாங்காவை சேர்த்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=>இனி மசாலா வடை செய்வதற்கு கடலைப்பருப்பு தேவையில்லை..!
ஸ்டேப் – 4
அதனுடனே 1/2 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் 3/4 கப் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட்டாக வரும் வரை நன்கு கலந்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
அது நன்கு ஒன்றுடன் ஒன்று கலந்து பேஸ்ட் போல் மாறிய பிறகு அதனை அடுப்பில் இருந்து இறக்கிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு பாத்திரத்தில் நெய் தடவி அதில் நாம் செய்து வைத்துள்ள Mango Bar கலவையை ஊற்றி 2- 3 நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்தீர்கள் என்றால் சுவையான Mango Bar தயார் ஆகிவிடும்.
அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி அனைவரும் சாப்பிடலாம். இந்த Mango Bar ரெசிபியை நீங்களும் உங்களின் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |