காளான் மிளகு மசாலா | Mushroom Pepper Masala in Tamil
ஹாய் நண்பர்களே.! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காளானை விரும்பி சாப்பிடுவோம் அல்லவா. ஆனால் காளானில் நம் வீட்டில் செய்வது காளான் கிரேவி, பிரியாணி, குழம்பு இந்த மாதிரி தான் சாப்பிடுவோம். எப்பொழுதுமே ஒரே மாதிரி சமைத்தால் பிடிக்காது. பிடிக்காத உணவை வித்தியாசமாக செய்து கொடுத்தால் சாப்பிடுவோம். அந்த வகையில் இன்றைய பதிவில் காளான் மிளகு மசாலா எப்படி செய்வது என்று தெரிந்துகொள்வோம். காளான் நம் உடலுக்கு மருத்துவம் பலன்களை தருகிறது. அதனால் உணவில் காளானை அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். காளானை பிடிக்காதவர்கள் கூட இப்படி செய்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க காளான் மிளகு மசாலா செய்வது எப்படி என்று பார்ப்போம்.
இதையும் செய்து ருசியுங்கள்⇒இப்படி செய்ங்க காளான் கிரேவியை – செம்ம டேஸ்ட்..!
தேவையான பொருட்கள்:
⇒ காளான்
⇒ மிளகு- 3 ஸ்பூன்
⇒ சீரகம் -1 ஸ்பூன்
⇒ கடலை எண்ணெய்
⇒ வெங்காயம்- 4
⇒ தக்காளி சிறியது -4
⇒ மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
⇒ மிளகாய் தூள் -1 ஸ்பூன்
⇒ மல்லித்தூள் -2 ஸ்பூன்
⇒ கறிவேப்பிலை சிறிதளவு
⇒ தண்ணீர் -1 டம்ளர்
⇒ இஞ்சி
⇒ பூண்டு
ஸ்டேப் 1:
முதலில் மிளகு 3 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன் சேர்த்து பவுடராக அரைக்கவும். பின் வெங்காயம், தக்காளியை சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுதாக அரைத்து கொள்ளுங்கள். காளானை இரண்டாக நறுக்கி வைக்கவும். இதனை ரெடி செய்து விடுங்கள்.
ஸ்டேப் 2:
அடுத்து அடுப்பில் கடாயை வைக்க வேண்டும். அதில் 6 ஸ்பூன் கடலை எண்ணெய் ஊற்றவும். பின் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். அதில் 2 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப் 3:
வெங்காயம் சிவந்த நிறம் வந்தவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள், 1 ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
ஸ்டேப் 4:
பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அதில் சிறிது கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
ஸ்டேப் 4:
எண்ணெய் பிரிந்த நிலையில் நறுக்கிய காளானை சேர்க்கவும். காளான் நல்லா வெந்தவுடன் அரைத்த வைத்த 2 ஸ்பூன் மிளகு பவுடரை சேர்த்து லைட்டா வதக்கி அடுப்பை off பண்ணிடவும்.
ஸ்டேப் 5:
அவ்ளோதாங்க காளான் மிளகு மசாலா ரெடி. எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டீர்களா. தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. வீட்டில் செய்து அசத்துங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |