அடடா விடுமுறையில் இப்படி ஒரு பிரியாணி சாப்பிடனும் டேஸ்ட் நாக்குலேயே இருக்கிறது..! அதற்கு பெயர்தான் பன்னீர் பிரியாணி ..!

Advertisement

பன்னீர் பிரியாணி செய்வது எப்படி?

உங்கள் வீட்டில் நிறைய வகையான பிரியாணி செய்து இருப்பீர்கள் ஆனால் இப்படி ஒரு பிரியாணி செய்து இருக்க மாட்டீர்கள். வீட்டில் நாம் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி செய்து சாப்பிட்டிருப்போம் அவ்வளவு ஏன் வெஜிடபிள் பிரியாணி செய்து சாப்பிட்டிருப்போம், மீன், இறால், புலாவ் என நிறைய விதமாக பிரியாணியை செய்து சாப்பிட்டு இருப்போம்..! இன்றைய பதிவில் நாம் பன்னீர் பிரியாணி செய்வது எப்படி என்பதை தான் பார்க்க போகிறோம்..!

Paneer Biryani Ingredients List in Tamil:

  1. எண்ணெய் – 2 டீஸ்பூன்
  2. நெய் – 1 டீஸ்பூன்
  3. பிரியாணி இலை, இலவங்கப்பட்டை – தலா 1
  4. ஏலக்காய் – 3
  5. கிராம்பு – 3
  6. வெங்காயம் – 1
  7. தக்காளி – 1
  8. பச்சை மிளகாய் – 3
  9. இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
  10. கொத்தமல்லி – 1 கைப்பிடி
  11. புதினா – 1 கைப்பிடி
  12. மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன்
  13. கொத்தமல்லி தூள் – 1/2 டீஸ்பூன்
  14. கரம் மசாலா – 1 டீஸ்பூன்
  15. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  16. தயிர் – 1/4 கப்
  17. பன்னீர் – 200 கிராம்
  18. பாசுமதி அரிசி – 1/4 கிலோ
  19. தேவையான அளவு உப்பு

இதையும் தெரிந்துகொள்ளவும் 👉👉  சுவையான வெஜிடபிள் பிரியாணி

செய்முறை:

ஸ்டேப்: 1 

முதலில் குக்கரை எடுத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும் அதன் கூடவே 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும் இரண்டும் சூடானதும்.

ஸ்டேப்: 2

அதில் பிரியாணி இலை 1, இலவங்கப்பட்டை – 1, ஏலக்காய் – 3, கிராம்பு – 3 இது அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்துவிடவும், அதன் பின் அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்

ஸ்டேப்: 3

அதில் பச்சை மிளகாய் – 3, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன் இது அனைத்தையும் சேர்த்து ஒரு முறை கலந்து விடவும். அதன் பின் ஒரு கைப்பிடியளவு  புதினா இலை சேர்த்து கலந்துவிடவும்.

ஸ்டேப்: 4

பின்பு அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், மல்லித்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா 1 டீஸ்பூன், காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 5

தக்காளி 1 எடுத்து நறுக்கி அதில் சேர்த்துக்கொள்ளவும். நன்கு கலந்த பின் அதில் 1/4 கப் கெட்டியான தயிர் சேர்க்கவும். பின்பு அதனை நன்றாக கலந்துகொள்ளவும்.

ஸ்டேப்: 6

 paneer biryani restaurant style in tamil

இப்போது பன்னீர் சிறிய துண்டாக நறுக்கி அதனையும் அதனுடன் சேர்த்து கலந்துவிடும் 1 நிமிடத்திற்கு.

இதையும் சாப்பிட்டு பாருங்கள் 👉👉 சிக்கன் போட்டு அசத்தலான சேமியா பிரியாணி

ஸ்டேப்: 7

அடுத்து பாசுமதி அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்து அதனையும் அதில் சேர்த்துக்கொள்ளவும். அதன் பின் அதனை ஒரு முறை நன்றாக கலந்து விடவும்.

 paneer biryani restaurant style in tamil

நாம் எப்போதும் குக்கர் வைப்பதற்கு எவ்வளவு தண்ணீர் வைப்போமோ அது மாதிரி இதற்கும் தண்ணீர் சேர்த்து, அதன் கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து,  கடைசியாக கொத்தமல்லி இலை மேல் தூவி விட்டு கடைசியாக நெய் விட்டு கலந்து விட்டு மூடி வைத்துவிடலாம்.

விசில் வந்தவுடன் இறக்கி ஒரு வெங்காய பச்சடி வைத்து சாப்பிடால் சுவை தனி தான்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement