பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்முறை..!

paruppu sadam in cooker tamil

பருப்பு சாதம் செய்யும் முறை | Paruppu Sadam Seivathu Eppadi

வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த பருப்பு சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! அனைவரும் சொல்வது காலையில் நேரம் இருக்காது அதனால் எதுவும் செய்ய முடியாமல் போய்விடும் என்று ஆனால் அதனை விட முக்கியமானது பருப்பு சாதம் எப்படி செய்தாலும் நன்றாக வருவதில்லை என்ன தான் செய்ய முடியும் என்று கேட்பீர்கள்.

ஒன்றும் செய்ய தேவையில்லை அனைத்தையும் சேர்த்து வதக்கி அரிசி விட்டு காய் சேர்த்து மூடி வைத்தால் பருப்பு சாதம் ரெடி வாங்க அதனை பற்றி தெளிவாக படித்து செய்துகொடுப்போம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

Paruppu Sadam in Cooker Tamil:

 1. அரிசி – 1/4 கிலோ
 2. பருப்பு – 200 கிராம்
 3. சீரகம் – 1 டீஸ்பூன்
 4. கடுகு – 1 டீஸ்பூன்
 5. மிளகு – 10
 6. மிளகாய் – 1
 7. பச்சை மிளகாய் – 1
 8. பூண்டு – 4
 9. கருவேப்பிலை –  1 கொத்து
 10. பெருங்காயம் – 1/2 டேபிள் ஸ்பூன்
 11. சின்ன வெங்காயம் – 15
 12. தக்காளி – 2
 13. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
 14. மிளகாய் தூள் – சிறிதளவு
 15. கொத்தமல்லி தழை – தேவையான அளவு
 16. நல்லஎண்ணெய் – தேவையான அளவு

இதையும் படியுங்கள் ⇒சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?

ஸ்டேப்: 1

முதலில் அரிசியையும் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து தனியாக கழுவி வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

 paruppu sadam recipe in tamil

அடுத்து அடுப்பில் குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு  சீரகம் – 1 டீஸ்பூன், கடுகு – 1 டீஸ்பூன் சேர்க்கவும் பொரியும் நிலையில் மிளகு சேர்க்கவும். அடுத்து அதில் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் சேர்த்த, பூண்டு, கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கவும் ஓரளவு வதங்கியதும் அதில் நாம் உரித்து வைத்த சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

 paruppu sadam recipe in tamil

அனைத்தும் வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து ஒருமுறை கலந்துவிட்டு அதில் மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய் தூள் – சிறிதளவு சேர்த்து கலந்துவிடுவும்.

இதையும் படியுங்கள் ⇒  சின்ன வெங்காய சாம்பார் இப்படி செய்து பாருங்கள்.!

ஸ்டேப்: 4

 paruppu sadam recipe in tamil

அடுத்து அந்த குக்கரில் நாம் ஊறவைத்து கழுவிவைத்த அரிசி பருப்பை சேர்க்குவோம். அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் விடவும் அடுத்து  தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்துவிட்டு கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி வைக்கவும். குழைவாக வேண்டுமென்றால் 3 விசில் விட்டு இறக்கி திறந்து மேல் நெய் விட்டு கிளறி காரணமாக சைடிஸ் வைத்து சாப்பிட்டால் ஆஹா சூப்பராக இருக்கும்.

இதையும் ட்ரை பண்ணுங்க 👉👉 கோவில் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.?

15 நிமிடத்தில் பட்டுனு பருப்பு சாதம் ரெடி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil