கிராமத்து ஸ்டைலில் பூண்டு குழம்பு வைப்பது எப்படி? | Poondu Kulambu in Tamil

gramathu poondu kulambu

செட்டிநாடு பூண்டு குழம்பு செய்வது எப்படி?  Gramathu Poondu Kulambu

நண்பர்களே வணக்கம் நமது பொதுநலம்.காம் பதிவில் உங்களுக்கு பிடித்த சமையல் குறிப்புகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்று பூண்டு குழம்பு வைப்பது எப்படி என்பதை பார்க்க போகிறோம். பொதுவாக கிராமத்து ஸ்டைலில் என்ன செய்தாலும் அதற்கு தனி சுவை இருக்கும், அதுவும் பூண்டு குழம்பு எப்படி இருக்கும். அதனால் இன்று பூண்டு குழம்பு எப்படி வைப்பது என்பதை பற்றி தெரிந்துகொண்டு வீட்டில் வைத்து ருசித்து தெரிந்துகொள்வோம் வாங்க.

மணமணக்கும் பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி?

பூண்டு குழம்பு எப்படி வைக்கிறது செய்முறை:

  1. புளி – 200 கிராம்
  2. தக்காளி – 3
  3. பூண்டு – 20 பல்
  4. சின்ன வெங்காயம் -10
  5. மிளகாய் தூள் -1 ஸ்பூன்
  6. மல்லித் தூள் -2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
  8. வெல்லம் – சிறிதளவு
  9. வெந்தயம் – 1 ஸ்பூன்
  10. சீரகம் – 1/2 ஸ்பூன்
  11. கடுகு – 1/2 ஸ்பூன்
  12. கருவேப்பிலை – 1 கொத்து
  13. நல்லெண்ணெய் – தேவையான அளவு

வெள்ளை பூண்டு குழம்பு செய்வது எப்படி?

ஸ்டேப் -1

poondu kulampu

  • முதலில் புளி, தக்காளியை தனித்தனியா கரைத்துவைத்துக்கொள்ளவும், பின்பு சின்ன வெங்காயத்தை உரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -2

 gramathu poondu kulambu

 

  • அதன் பிறகு கடாயை எடுத்துக்கொள்ளவும், அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக்கொள்ளவும், நல்லெண்ணெய் சூடான பிறகு அதில் கடுகு சேர்க்கவும், பின்பு அது பொரிந்தவுடன் எடுத்துவைத்த சீரகம், வெந்தயத்தையும் சேர்த்துக்கொள்ளவும் இவை பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். அதன் பிறகு பூண்டை அதில் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப் -3

பூண்டு குழம்பு எப்படி வைக்கிறது செய்முறை

  • பூண்டு சிறிது நேரம் வதங்கிய பின் உரித்து வைத்த சின்ன வெங்காயத்தை அதனுடன் சேர்த்து வதக்கவும். பூண்டு வெங்காயம் இவை இரண்டு நன்கு சிவப்பு நிறமாகும் வரை வதக்கிய பின் அதில் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -4

 செட்டிநாடு பூண்டு குழம்பு

  • மூன்றும் நன்கு வதங்கிய பின் அதில் நாம் எடுத்துவைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ளவோம்.
  • மல்லித்தூள், மிளகாய்தூள், மஞ்சள்தூள் இவை முறையும் உங்களின் காரத்திற்கு ஏற்றவாறு சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -5

 செட்டிநாடு பூண்டு குழம்பு

  • மசாலா பொருட்களை சேர்த்த பின் நன்கு கலந்து கொள்ளவும். பின்பு அதனுடன் கையில் கரைத்து வைத்த தக்காளியை சேர்த்துக்கொள்ளவும்.
  • தக்காளியில் பச்சை வாடை போகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

ஸ்டேப் -6

 poondu kulambu seivathu eppadi

  • தக்காளி சேர்த்து 1 நிமிடத்திற்கு பிறகு கரைத்துவைத்த புளிக்கரைசலை சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -7

poondu kulambu seivathu eppadi in tamil

  • இப்போது அதில் தேவையான அளவு கல் உப்புசேர்த்து கொதிக்க விடுங்கள். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து எடுத்துவைத்த வெல்லத்தை சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிடவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்