வரகு அரிசியில் சீப்பு சீடை சுவையாக செய்யலாம் வாங்க

seepu seedai recipe in tamil

சீப்பு சீடை

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வரகு அரிசியில் சீப்பு சீடை எப்படி செய்வது என்றுதான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக இந்த சீடையை தீபாவளிக்கு செய்வார்கள். ஆனால் அவை பொதுவாக புழுங்கல் அரிசி, பச்சை அரிசி போன்றவற்றில் செய்வார்கள். இது போன்ற சீடைகளை சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு சுவையான வரகு சீப்பு சீடையை ஆரோக்கியமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம். தீபாவளிக்கு இந்த சீடையை செய்து நீங்களும் அசத்துங்கள்.

தீபாவளிக்கு இந்த சாமை அரிசி முறுக்கை செய்து பாருங்கள்

 

வரகு சீப்பு சீடைக்கு  தேவையான பொருட்கள்:

  1. வரகு அரசி மாவு-1 கப் 
  2. தேங்காய்ப்பால் – கால் கப் 
  3. எண்ணெய் – தேவையான அளவு 
  4. வெண்ணைய்  – 1 டீஸ்பூன் 
  5. உப்பு – தேவையான அளவு
  6. உளுத்தம் மாவு-கால் கப்
  7. கடலை மாவு – கால் கப்  

வரகு சீப்பு சீடை செய்முறை:

ஸ்டேப்:1

முதலில் ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வரகு மாவு, கடலை மாவு, உளுத்தம் மாவு போன்றவற்றை அந்த பாத்திரத்தில் சேர்த்து உங்களுக்கு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

ஸ்டேப்:2

அதன் பிறகு ஒரு கடாயில் துருவி வைத்த தேங்காவை சாறு பிழிந்து கடாயில் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடம் சூடு படுத்தி, கலந்து வைத்த மாவில் கொஞ்சம் கொஞ்சமாக தேங்காப்பாலை சேர்த்து  நன்றாக கிளறிவிட வேண்டும்.

ஸ்டேப்:3

 seedai murukku

கிளறிய பிறகு அதை சப்பாத்தி மாவுக்கு பிசைவது போல் பிசைந்து கொண்டு முறுக்கு உரலில்  முறுக்கு சீடை போடும் அச்சியை மாற்றி ஒரு பிளாஸ்டிக் பேப்பரின் மீது  நேராக பிழிந்து விட வேண்டும்.

ஸ்டேப்:4

 murukku seedai in tamil

முறுக்கு மாவை பிழிந்த பிறகு ஒரு கத்தியை எடுத்து உங்களுக்கு தேவையான அளவில் கட் செய்து அதை வளையும் படி ஒட்டிவிட வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து  சீப்பு சீடையை போட்டு பொறித்து எடுத்து கொள்ளவேண்டும்.

இப்பொழுது சுவையான வரகு சீப்பு சீடை தயார்.  இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுங்கள்.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>Samayal kurippu tamil