ஒருமுறை செய்தால் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ருசியான தேங்காய் தோசை..! இப்படி செஞ்சி பாருங்க..!

Advertisement

Thengai Dosa Seivathu Eppadi Tamil

ஹலோ பிரண்ட்ஸ்..! உங்களுக்கு தோசைன்னா ரொம்ப பிடிக்குமா..? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். தோசை பிடித்தவர்களுக்கு அந்த தோசையை எப்படி செய்து கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். உதாரணத்திற்கு தோசையில் வெங்காயம் போடுவது, கேரட் போடுவது, மசாலா தோசை இதுபோல பல வகையான தோசை இருக்கிறது. சரி நீங்கள் தேங்காய் தோசை செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..? சாப்பிடவில்லை என்றால் இந்த பதிவில் கூறும் தேங்காய் தோசையை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். மசாலா தோசையெல்லாம் வேண்டாம் தேங்காய் தோசை தான் வேண்டும் என்று சொல்வீர்கள். சரி வாங்க நண்பர்களே தேங்காய் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் தோசை செய்வது எப்படி..?

  1. பச்சரிசி – 2 டம்ளர்
  2. வெந்தயம் – 1 ஸ்பூன்
  3. அவல் – 1 டம்ளர்
  4. துருவிய தேங்காய் – 1 டம்ளர்

பச்சரிசியை ஊறவைக்கவும்:

முதலில் 2 டம்ளர் அல்லது உங்களுக்கு தேவையான அளவு பச்சரிசியை எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயம் சேர்த்து கொள்ளவும். இப்பொழுது இதை நன்றாக கழுவி 3 அல்லது 4 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

தோசை ஊற்றினால் இது மாதிரி செய்து சாப்பிடுங்கள்

பின் அவல் 1 டம்ளர் அல்லது உங்களுக்கு தேவையான அளவு எடுத்து அதை கழுவி 5 நிமிடம் வரை ஊறவைத்து எடுத்து கொள்ளுங்கள். அடுத்து துருவிய தேங்காய் தேவையான அளவு சேர்த்து கொள்ளவும்.

மாவு அரைக்கும் முறை:

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள அனைத்தையும் கிரைண்டரில் போட்டு மாவு போல அரைத்து கொள்ளவும். அவ்வளவு தான் இப்பொழுது மாவு தயார். இந்த மாவை 8 மணி நேரம் வரை புளிக்க வைக்க வேண்டும்.

சிக்கன் சால்னா இப்படி ஒரு முறை செஞ்சு இட்லி, தோசைக்கு சாப்பிட்டா போதும் டேஸ்ட் மறக்கவே முடியாது

பின் இந்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அடுத்து தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை ஊற்றி பிரட்டி போடாமல் எடுக்கவும்.

அவ்வளவு தான் பஞ்சு போல மெத்து மெத்துன்னு தேங்காய் தோசை ரெடி. இந்த தோசைக்கு எந்த சட்னி வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். அவ்வளவு அருமையாக இருக்கும்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement