தேங்காய் இருந்தால் போதும் மிகவும் ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம்..!

Advertisement

தேங்காய் வைத்து ஸ்வீட் செய்வது எப்படி..? 

வணக்கம் பொதுநலம்.காம்  பதிவின் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் தேங்காய் வைத்து ஒரு அருமையான ஸ்வீட் செய்வது எப்படி என்று  தான் பார்க்க போகிறோம். நம் குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் இனிப்பு பண்டங்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக  நாம் வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் தேங்காய் லட்டு செய்து  அசத்தலாம். இந்த தேங்காய் லட்டு ஸ்வீட் ஆரோக்கியமானதாக இருக்கும். அந்த தேங்காய் லட்டு சுலபமான முறையில் எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?

தேங்காய் லட்டு செய்வதற்கு தேவையான பொருட்கள்: 

  1. தேங்காய் – 1 கப்
  2. ரவை – 2 ஸ்பூன்
  3. கசகசா – முக்கால் டீஸ்பூன்
  4. நெய் – தேவையான அளவு
  5. பொட்டுக்கடலை – 2 ஸ்பூன்
  6. ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  7. சர்க்கரை – முக்கால் கப்
  8. தண்ணீர் – கால் கப்

ருசியான தேங்காய் லட்டு செய்வது எப்படி..? 

ஸ்டெப் -1

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 2 ஸ்பூன் ரவை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்க வேண்டும். ரவையை நன்றாக வறுத்த பின் அதை ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் -2 

பின் அதே கடாயில் கசகசாவையும் வறுக்க வேண்டும். கசகசா நன்றாக வறுத்த பின் அதையும் ரவையுடன் சேர்க்க வேண்டும்.

ஸ்டெப் -3

பிறகு தண்ணீர் சேர்க்காமல் தேங்காயை அரைத்து கொள்ள வேண்டும். பின்  கடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி  அரைத்த தேங்காயை சேர்க்க வேண்டும்.  தேங்காயை நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். தேங்காயில் உள்ள ஈரப்பதம் போகும் வரை நன்றாக வறுக்க வேண்டும்.

ஸ்டெப் -4

பின்னர் நாம் வறுத்து எடுத்து வைத்துள்ள ரவை மற்றும் கசகசாவை மிக்ஸியில் போட்டு அதனுடன் 2 ஸ்பூன் பொட்டுக்கடலை சேர்த்து மூன்றையும் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் -5

பிறகு அரைத்த இந்த பொடியை தேங்காயுடன் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன் சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக பிசைந்து  கொள்ள வேண்டும்.

ஸ்டெப் -6

பின்னர் ஒரு கடாயில் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் வரை கொதிக்க வைக்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்து வந்த பின் அதனுடன் நாம் கலந்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் -7

தேங்காய் சேர்த்து சர்க்கரை பாவு தேங்காயுடன் நன்றாக சேரும் வரை கிண்ட வேண்டும். தேங்காயும் சர்க்கரை பாவும் நன்றாக கலந்த பின் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

ஸ்டெப் -8 

பின் மிதமான சூட்டில் இருக்கும் போதே லட்டு போன்று செய்ய வேண்டும்.

அவ்வளவு தான்… அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய தேங்காய் லட்டு ரெடி..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement