இலையில் விநாயகருக்கு பிடித்த பூரணம் கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்கள்

Advertisement

இலை கொழுக்கட்டை செய்வது எப்படி?

நண்பர்களே  அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில் விநாயகருக்கு பிடித்த இலை கொழுக்கட்டையை இப்படி செய்து பாருங்கள். இனிப்பு வகை என்றால் அதிகளவு யாருக்கும் பிடிக்காது ஆனால் விநாயகர் சதுர்த்திக்கு செய்யக்கூடிய கொழுக்கட்டையை யாருக்கும் பிடிக்காமல்  இருப்பதில்லை..! ஏன் என்றால் இலை கொழுக்கட்டை என்றால் அனைவருக்கும் பிடிக்கும். வாங்க  கொழுக்கட்டையை  செய்வது என்று படித்து தெரிந்துகொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒  இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்:

  • கொழுக்கட்டைமாவு – 1/2 கிலோ
  • தேங்காய் – துருவியது 2 கப்
  • வெல்லம் – கால் கிலோ
  • நெய் – சிறிதளவு
  • ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  • தண்ணீர் – 2 1/2 கப்
  • எண்ணெய் – 4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.
  • பூசண இலை – 20 அல்லது அரசன் இலை எடுத்துக்கொள்ளவும்.

செய்முறை:

ஸ்டேப் -1

  • முதலில் ஒரு மாவிற்கு தேவையான அளவு தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். கொதிக்கும் போது அதில் சிறிதளவு நெய் ஊற்றி கொதிக்கவிடவும்.

ஸ்டேப் -2

  • ஆறியதும் மாவை எடுத்துக்கொண்டு தேவையான அளவு கொதிக்கவைத்த தண்ணீரை சேர்த்து பிசைந்து தனியாக வைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -3

  • பின்பு ஒரு கடாயில் சிறிது நெய் ஊற்றி நெய் பிடிக்கவில்லை என்றால் சேர்மகாமலும் செய்யலாம். பின்பு தேங்காய் துருவல் 1/2 கப், ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் வறுத்துக்கொள்ளவும். பின்பு அதில் வெல்லம் சேர்த்து அதனையும் வதக்கவேண்டும்.

ஸ்டேப் -4

  • வதக்க ஆரம்பித்தால் வெல்லம் உருக ஆரம்பித்துவிடும். அதன் பின் இலையை எடுத்து கழுவிக்கொள்ளவும்.

ஸ்டேப் -4

  • இலையை எடுத்து அதில் நெய் அல்லது தண்ணீர், எண்ணெய்  ஆகியவற்றில் எதாவது ஒன்றை  தடவிக்கொள்ளவும். அப்போது தான் அது இலையில் ஒட்டாமல் வரும். கொஞ்சம் , மாவு எடுத்துக்கொண்டு அதில் வடை போல் நைசாக தட்டிக்கொள்ளுங்கள் பின் அதில் வைத்து  இலைகளை மடிக்க வேண்டும். இது போன்று மீதமுள்ள மாவினையும் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -5

  • கடைசியாக இட்லி பானையில் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும். அதன் பின் இட்லி தட்டில் செய்த இலையை வைத்து இட்லி பானையில் வைக்கவும் பின்பு மூடிவைக்கவும்.
  • 10 நிமிடம் கழித்து சுவைத்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement