முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Mukesh Ambani Sothu Mathippu

Mukesh Ambani Sothu Mathippu

ஹாய் பிரண்ட்ஸ்.. பொதுவாக நமக்கு தெரிஞ்சவுங்க ஏதாவது போன் அல்லது பொருள் வாங்கிட்டாங்க அப்படினாலே சும்மா கேலிசெய்வதற்காக நீயெல்லாம் அம்பானி பரம்பரையில பொறந்திருப்ப அப்படினு சொல்லுவோம். அம்பானி அப்படினாலே அந்த வார்த்தை பணக்காரர்களை குறிக்கும் வார்த்தைகளா நாம் பயன்படுத்தி வருகின்றோம். இப்படி சொல்லப்படுகிற அம்பானி என்கிற முகேஷ் அம்பானி இந்தியாவிலேயே மிகவும் பணக்காரர் பட்டியல்களில் முதல் இடத்தை பிடித்திருப்பவர் முகேஷ் அம்பானி தான். இந்த முகேஷ் அம்பானியின் தற்போதை சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் உங்களுக்கானது தான் இந்த பதிவு, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை பற்றி தான் இந்த பதிவில் பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

முகேஷ் அம்பானி சொத்து மதிப்பு:

ஒரு தொழில் அதிபர், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர், மற்றும் உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியை அறிமுகம் செய்யத் தேவையில்லை. இவரது சொத்து மதிப்பு 9,240 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.

முகேஷ் அம்பானி பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்:

முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா இந்தியாவின் விலை உயர்ந்த வீடு என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை அதாவது பிரிட்டிஷ் குயின் எலிசபெத் ராணியின் வீட்டிற்கு நிகரான வீடு என்று சொல்கின்றன. இந்த வீட்டில் 600 மேற்பட்ட நபர்கள் வேலை செய்வதற்கு மட்டுமே இருக்கின்றன. இது போக இந்த வீட்டின் 5 மாடி கார் பார்க்கிங் செய்யும் இடமாம்.

இந்தியாவில் அதிக வரி காட்டும் நபர் என்றாலும் முகேஷ் அம்பானி தான். இந்தியாவில் 100 கோடி மக்கள் அவர்கள் வாங்கு பொருட்களுக்கு வரி பணம் கட்டி வருகின்றன. அந்த 100 சதவீதத்தில் தனி நபராக முகேஷ் அம்பானி மட்டும் 5 சதவீதம் வரி பணம் கட்டி வருகின்றாராம்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி இந்தியாவில் பிறக்க வில்லையாம். திருபாய் அம்பானி ஏமன் நாட்டின் தொழிலையாக வேலை செய்த போது முகேஷ் அம்பானி பிறந்தாராம். ஆகவே முகேஷ் அம்பானியின் பிறப்பிடம் ஏமன் நாடாகும்.

முகேஷ் அம்பானியின் ஆசை பணக்காரர் ஆகவேண்டும் என்ற ஆசை இல்லையாம். அவர் ஒரு நல்ல professor ஆக வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம். ஆனால் இவர் ஒரு தொழிலதிபர் ஆகியதால் இவரது ஆசை நிறைவேறவில்லை. ஆனால் இவரது ஓய்வு காலத்தில் ஒரு கல்லூரியில் ஆசிரியராக சேர வேண்டும் என்பது தான் அவரது ஆசையாம்.

முகேஷ் அம்பானியின் மனைவிதான் நீத்தா அம்பானி இது அனைவருக்கும் தெரிந்திருக்கும். நீத்தா அம்பானியின் 41-வது பிறந்த நாள் அன்று முகேஷ் அம்பானி அவரது மனைவிக்கு பரிசாக வழங்கியது என்ன தெரியுமா? தனியார் விமானம் (Private Jet) ஆகும். இந்த ஜெட் விலை 62 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

ரிலையன்ஸ் நிறுவனம் 2003-யில் புதிதாக ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என்று யோசித்துள்ளனர். Reliance Fresh-வுடன் டையப் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துள்ளனர். முகேஷ் அம்பானி ரெஸ்ட்ராண்ட் ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார். ஆனால் முகேஷ் அம்பானி வெஜிடேரியன் என்பதால் இறைச்சி உணவுகளை விற்பனை செய்யக்கூடாது என்று கூறி. அதன் பிறகு Reliance Fresh-யில் இனி எப்பொழுதுமே நான்வெஜ் விற்பனை செய்யக்கூடாது என்றும் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்களாம்.

முகேஷ் அம்பானிக்கு மது அருந்துவது பிடிக்காதாம்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com