அதிசய அணியின் வகைகள் என்னென்ன தெரியுமா.!

Advertisement

அதிசய அணி

வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அதிசய அணி  என்வென்று தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். தமிழ் இலக்கியங்களில் ஏராளமான அணி வகைகள் உள்ளன. அதில் அதிசய அணியும் ஒன்றாகும். ஒரு பொருளின் அழகை மிகைப்படுத்தி கூறுவது ஆகும். மேலும் அதிசய அணி என்றால் என்ன, அவை எத்தனை வகைப்படும் என்று பொருளோடு தெளிவாக நம் பதிவில் மூலம் படித்து அறியலாம் வாங்க.

உவமை அணி விளக்கம்

 

அதிசய அணி என்றால் என்ன?

அதிசய அணி என்பது ஒரு கவிஞர் ஒரு பொருளின் அழகை மிகவும் அழகாக அதை அதிகப்படுத்தி கூறுவதே அதிசய அணியாகும். கவிஞர்கள் வழக்கமாக ஒரு பொருளை  மிகைப்படுத்திக் கூறும் மரபுக்கு முரண்படாமல் கூறவேண்டும் என்று  பொருள்படும். மேலும் அதிசய அணியின் வகைகளை காணலாம் வாங்க.

அதிசய அணியின் வகைகள்:

அதிசய அணி மொத்தம் ஆறு வகைப்படும் , அவற்றை காணலாம்.

  • பொருள் அதிசயம் 
  • குண அதிசயம் 
  • தொழில் அதிசயம் 
  • ஐய அதிசயம் 
  • துணிவு அதிசயம் 
  • திரிபு அதிசயம்

பொருள் அதிசயம்:

பொருள் அதிசயம் என்பது ஒரு பொருளின் இயல்பை அழகுபடுத்தி அதிசயமாக  கூறுவது தான் பொருள் அதிசயமாகும்.

எடுத்துக்காட்டு:

பண்டு புரம்எரித்த தீ மேல்படர்ந்து, இன்றும்
அண்ட முகடு நெருப்பு அறாது – ஒண்தளிர்க்கை
வல்லி தழுவக் குழைந்த வடமேரு
வில்லி நுதல்மேல் விழி

இந்த பாடலில்  சிவன் பண்டைக் காலத்தில் முப்புரத்தை எரித்தான்  என்றும் அந்த தீயானது பல இடங்களில் இன்றும் அண்டத்தில்பரவி கொண்டுதான் இருக்கிறது என்றும். நான் ஒண் தளிர்க்கை வல்லியாகிய அவளைத் தழுவச் சென்றேன்
அவள் புருவம் மேரு மலை வில் அன்று வளைந்தது போல் வளைகிறது அவள் ஊடலை அவன் இவ்வாறு அழகுபடுத்தி அதிசயமாக கூறப்படுகிறது.

குண அதிசயம்:

குண அதிசயம் என்பது ஒரு குணத்தின் இயல்புகளை விளக்குமாறு அதை உயர்த்தி கூறுவதே குண அதிசயம் எனப்படும்.

எடுத்துக்காட்டு:

மாலை நிலவொளிப்ப மாத ரிழைபுனைந்த
நீல மணிக ணிழலுமிழ – மேல்விரும்பிச்
செல்லு மிவள்குறித்த செல்வன்பாற் சேர்தற்கு
வல்லிருளா கின்ற மறுகு.

இந்த பாடலில் மாலை பொழுதில் வெளிச்சமானது மகளிர்கள் அணிந்திருக்கும் மணியின் வெளிச்சம் நிழல் ஒளியை தருகிறது என்றும் இதனால் காதலனும், காதலியும் சொன்ன இடத்திற்கு  போக முடியவில்லை என்று கூறப்படுவதால் இவை குண அதிசய அணியாகும்.

தொழில் அதிசயம்:

தொழில் அதிசய அணியானது ஒரு தொழிலின் உயர்வை மிகைப்படுத்தி உயர்த்து கூறுவது ஆகும்.

ஐய அதிசயம்:

ஐய அதிசயம் என்பது ஐயப்பட்டு  கூறுவதன் மூலம் ஒரு பொருளை உயர்த்தி  கூறுவதே ஐய அதிசயமாகும்.

எடுத்துக்காட்டு:

உள்ளம் புகுந்தே யுலாவு மொருகாலென்
னுள்ள முழுது முடன்பருகு – மொள்ளிழைநின்
கள்ளம் பெருகும் விழிபெரிய வோகவல்வே
லுள்ளம் பெரிதோ வுரை.

இந்த பாடலில்  உள்ளத்தில் நுழைந்து உலவுகிறார்கள் என்று  மற்றொரு முறை உள்ளத்தை அள்ளிப் பருகுகிறது  என்றும் ஒள்ளிழை நின் கள்ளம் பெருகும் விழிகள் பெரியனவோ அல்லது உன்னுடைய  உள்ளம் பெரியதோ என்று  சொல்லி  ஐயப்படுவதால்  இவை ஐய அதிசயமாகும்.

துணிவு அதிசயம்:

துணிவு அதிசயம் என்பது ஐயத்தை தவிர்த்து ஒரு பொருளை உயர்த்தி கூறுவதே துணிவு அதிச அணியாகும்.

எடுத்துக்காட்டு:

ஆளும் கரியும் பரியும் சொரிகுருதி
தோளுந் தலையுஞ் சுளித்தெறிந்து – நீள்குடையும்
வள்வார் முரசு மறிதிரைமேற் கொண்டொழுக
வொள்வா ளுறைகழித்தான் வேந்து.

இந்த பாடலில் போர் காலத்தில் கரியும், பரியும் சொருகின்றன என்றும் இதனால் தோலும் தலையும் சுளிக்கின்றது என்றும் இந்த நிலையில் வேந்தன் தன் உறையிலிருந்து வாளை உருவுகிறான் என்று வேந்தனை உயர்த்தி கூறுவதால் இது துணிவு அதிசய அணியாக அமைகின்றது.

திரிபு அதிசயம்:

திரிபு அதிசய அணி என்பது ஒரு பொருளை வேறொரு பொருளாக மாற்றி திரிபுற்று விளக்குமாறு உயர்த்தி கூறுவதே திரிபு அதிசய அணியாகும்.

எடுத்துக்காட்டு:

திங்கள் சொரிநிலவு சேர்வெள்ளி வள்ளத்துப்
பைங்கிள்ளை பாலென்று வாய்மடுப்ப – வங்கயலே
காந்தர் முயக்கொழிந்தார் கைவறிதே நீட்டுவரா
லேந்திழையார் பூந்துகிலா மென்று.

இப்பாடலில் வெள்ளி கிண்ணத்தில் தோன்றும் வெளிச்சத்தை நிலா வெளிச்சம் என்றும் அதை எண்ணி வளர்க்கும் கிளியானது அதில் வாயயை வைக்கும் என்றும், அதற்க்கு பக்கத்தில் மயங்கிக்கிடந்த காதலன் நிலவின் வெளிச்சத்தை பார்த்து தன்னுடைய காதலியின் ஆடை என்று நினைத்து கொண்டு நிலவை பார்த்து கை நீட்டுவதால். காதலன் இவ்வாறு திரிந்து உணருவதால் இவை திரிபு அதிசய அணியாகவும்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement