ஆடுகளுக்கு தடுப்பூசி அட்டவணை | Aadu Thaduppu Oosi Attavanai

Aadu Thaduppu Oosi Attavanai

ஆடு தடுப்பூசி அட்டவணை | Goat Vaccination Schedule in Tamil

கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி நாம் வளர்க்கக்கூடிய கால்நடைகளுக்கு ஆண்டுக்கு நான்கு முறை தடுப்பூசி செலுத்த வேண்டும். மழைக்காலத்தில் ஆட்டின் 6 மாத வயதில் அடைப்பான் நோய் தாக்க வாய்ப்புள்ளது. நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி தடுப்பூசி போட வேண்டும். அது போன்று செம்மறி ஆடுகளுக்கு மழைக்காலங்களில் நீலநாக்கு என்ற நோய் தாக்க வாய்ப்புள்ளது. எனவே ஆண்டுக்கு ஒரு முறை நோய்க்கான தடுப்பூசி போட வேண்டும். சரி வாங்க மாடுகளுக்கான தடுப்பூசி அட்டவணையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை

Aadu Thaduppu Oosi Attavanai:

 1. ஆடுகளுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கால்வாய் நோய்க்கான தடுப்பூசி செலுத்த வேண்டும்.
 2. ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் ஆடுகளுக்கு பி பி ஆர் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும்.
 3. ஆகஸ்ட் மாதத்தில் கால் வாய் நோய் தடுப்பூசி ஆடுகளுக்கு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று செலுத்த வேண்டும்.
 4. அக்டோபர் மாதத்தில் துள்ளுமாரி தடுப்பூசி செலுத்த வேண்டும்.
 5. குடற்புழு மருந்துகளை பிறந்த 30 வது நாள், 2, 3, 4, 6, 9-வது மாதங்களில் போட வேண்டும்.

ஆடுகளுக்கு குடற்புழு நீக்குவதற்கு அட்டவணை:

 • ஆட்டுக்குட்டிகளுக்கு 6 மாதம் வரை மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
 • ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை அதாவது பருவமழைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு முறையும், பருவ மழையின் போது ஒரு முறையும், பருவ மழைக்குப்பின் இருமுறையும் கொடுக்க வேண்டும்.
ஆட்டினுடைய வயது  மருந்தின் பரிந்துரைகள் 
02-வது மாதம்  நாடாப் புழுக்களுக்கான மருந்து
03-வது மாதம்  நாடாப் புழுக்களுக்கான மருந்து
04-வது மாதம்  நாடாப் புழுக்களுக்கான மருந்து
05-வது மாதம்  உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
06-வது மாதம்  உருண்டைப்புழுக்களுக்கான மருந்து
09-வது மாதம்  உருண்டை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
12-வது மாதம்  தட்டைப் புழுக்களுக்கான மருந்து
நீங்கள் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களா? கட்டாயம் படிங்க..!

மாத தடுப்பூசி அட்டவணை:

மாதம் தடுப்பூசி  மருந்திற்கான பரிந்துரைகள் 
ஜனவரி – மார்ச்  தட்டை புழுவிற்கான மருந்து 
ஏப்ரல் – ஜூன்  உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து
ஜூலை – செப்டம்பர்  தட்டை புழுவிற்கான மருந்து 
அக்டோபர் – டிசம்பர்  உருளை / நாடாப்புழுக்களுக்கான மருந்து

குடற்புழு நீக்கம் செய்யும் போது கவனிக்க வேண்டியவை:

 1. ஆடுகளுக்கு தகுந்த குடற்புழு மருந்தை தேர்வு செய்யவும்.
 2. தூள் மருந்தைப் பயன்படுத்தும்பொழுது வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது கரையாத மருந்துத் துகள்களும் இருக்குமாறு கொடுக்க வேண்டும்.
 3. வெறும் வயிற்றுடன் உள்ள ஆடுகளுக்கு அதிகாலையில் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
 4. ஆட்டிற்கு மருந்துக் கலவையை வாயின் வழியாக ஊற்றும் பொழுது புரையேறாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
 5. குடிநீரில் குடற்புழுநீக்க மருந்தும் நோய் எதிர்ப்பு மருந்தும் ஒன்றாக சேர்த்து கொடுக்கக்கூடாது.
 6. குடற்புழுக்களின் வகைகளையும் முட்டைகளையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப மருந்து கொடுக்க வேண்டும்.
 7. தொடர்ந்து ஒரே மருந்தைக் கொடுக்காமல் மாற்றித் தருவது அவசியம்.

வெள்ளாடு தடுப்பூசி அட்டவணை:

நோய் மற்றும் தடுப்பூசியின் பெயர்  முதலாம் தடுப்பூசி  தொடர் தடுப்பூசி  கவனம் 
பிபிஆர் நோய் (பெஸ்ட்டெஸ்பெட்டிட்ஸ் ரூமினென்ட்ஸ்) 3-4 மாதம்  ஆண்டிற்கு ஒருமுறை  தகுந்த நோய் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். 
கோமாரி நோய் தடுப்பூசி ஆட்டிற்கு 2 மாத வயதில்  ஆண்டிற்கு ஒருமுறை  நோய்க்கிளர்ச்சியின் போது பாதிக்கப்படாத ஆடுகளுக்கும் அண்டைக் கிராம கால்நடைகளுக்கும் தடுப்பூசி அளித்தல் அவசியம்.
துள்ளுமாரி நோய் தடுப்பூசி  6 வார வயதில்  ஆண்டிற்கு ஒருமுறை  மழைக்காலத்திற்கு முன்பும், ஆடு குட்டிகளை ஈனும் பருவத்தில் தாய் ஆடுகளுக்கும் தடுப்பூசி செலுத்துவது அவசியம். 
ஆட்டம்மை தடுப்பூசி  3-6 மாத வயதில்  ஆண்டுக்கு ஒருமுறை  கோடை காலத்திற்கு முன்பு நோய் காணும் பகுதிகளில் ஒரு தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். 
அடைப்பான் நோய் தடுப்பூசி  நோய்க் கிளர்ச்சியின் போது மட்டும் 6 மாத வயதில் நோய் அடிக்கடி தோன்றும் பகுதியில் வருடத்திற்கு ஒருமுறை, பிற பகுதிகளில் தேவையில்லை  நோய் காணும் பகுதிகளில் மழைக்காலத்திற்கு முன்பு தடுப்பூசி செலுத்த வேண்டும். 
டெட்டனஸ் ஜன்னி தடுப்பூசி  குட்டி ஈன 6-8 வாரத்திற்கு ஒரு முறை குட்டிகள் பிறந்து 48 மணி நேரத்திற்கு பின் தடுப்பூசி செலுத்த வேண்டும்.
தொண்டை அடைப்பான் தடுப்பூசி  6 மாத வயதில் நோய் காணும் பகுதியில் மட்டும்  ஆண்டிற்கு ஒருமுறை  மழைக்காலத்திற்கு முன்பு ஒரு தடுப்பூசி செலுத்துவது அவசியம். 

எந்த ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டியது கட்டாயம்?

ஆடுகளுக்கு கண்களின் உட்சவ்வு வெளிறி போய் இருக்கும், மூக்கில் சளி, ஆட்டின் பின் பகுதியில் கழிச்சலினால் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும். தாடையில் வீக்கம், உடல் மிகவும் மெலிந்து காணப்படும். இது போன்ற ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தல் அவசியம்.

பிற ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் ஏன் செய்தல் கூடாது?

அனைத்து ஆடுகளுக்கும் அடிக்கடி குடற்புழு செய்து வந்தால் குடற்புழுக்களுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புத்திறன் குறைகிறது. குடற்புழுக்களின் எண்ணிக்கை அதிகமாகி மற்ற ஆடுகளுக்கும் பரவுகிறது. அதனால், தேவை உள்ள ஆடுகளுக்கு மட்டும் குடற்புழு நீக்கம் செய்தால் போதும்.

பாமாச்சா அட்டை எதற்கு பயன்படுகிறது?

ஆட்டினுடைய கண்களின் உள்சவ்வை பார்த்து இரத்தசோகையினை அறிந்துகொள்வதற்கு இந்த பாமாச்சா அட்டை பயன்படுகிறது.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com