ஆன்மிகம் என்றால் என்ன? அதை பற்றிய சில தகவல்கள்

Advertisement

ஆன்மிகம்

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஆன்மிகம் என்றால் என்வென்று தான் தெரிந்துகொள்ள போகிறோம். இன்று பலரும் அதிகமாக நம்பிக்கை கொண்டிருக்கும் விஷயங்களில் ஆன்மிகமும் ஒன்றாகும். பொதுவாகவே நம் வீட்டில் இருக்கும் சிலர்  ஆன்மிக விஷயங்களில் தீவிரமாக இருப்பார்கள். ஆன்மிகம்  என்பது ஒரு மனிதனின் வாழ்க்கை முறைகளை நிர்ணையக்க கூடியது. ஆன்மிகத்தில் மூழ்கி இருப்பவர்கள், நெற்றியில் விபூதி அணிந்து, அதிகமாக கோவிலுக்கு செல்லவேண்டும் என்று நினைப்பார்கள். அதிகபட்சமாக  ஒரு சிலர்க்கு அதிகமாக கடவுள் நம்பிக்கைகளையும் கொண்டிருப்பார்கள். மேலும் ஆன்மிகத்தை பற்றி நம் பதிவில் அறியலாம் வாங்க.

கோத்திரம் என்றால் என்ன..? 

ஆன்மிகம் என்றால் என்ன?

ஆன்மிகம் என்பது ஆன்மவியல் என்று ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களை குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஆன்மிகம் ஆனது மனிதனின் கடந்து சென்ற நம்பிக்கைகளையும் நோக்கங்களையும் கொண்டவையாகும்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள் காவி உடைகளை மட்டும் அணிந்து, எந்த நேரமும் கடவுளின் நாமத்தை உச்சரித்து கொண்டே இருப்பார்கள். இந்த காவி உடைகளை அணிபவர்கள் குடும்ப வாழ்க்கைகளை மறந்துவிட்டு, அவர்களுக்கென்று ஒரு பெயர், அடையாளம், தோற்றம், குடும்பம் என்று வாழ்கிறார்கள்.

ஆன்மிகம் என்பது எப்பொழுதும் நெற்றியில் விபூதியை பூசிக்கொண்டு, எந்நேரமும் இறைவனை வழிபடுதல், எல்லோரும் பார்க்கும் படி கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்குவது இவை போன்றவை மட்டுமல்ல.

ஒரு மனிதன் மனதில் எந்த ஒரு தீய எண்ணங்களும் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாமல் இருந்தாலும், தீய விஷயங்களை  செய்யாமல் மனசாட்சி படி நடப்பதே ஆன்மிகமாகும்.

அதேபோல் இறைவனுக்காக அதிகமாக  செலவு செய்து பூஜை செய்வதெல்லாம் ஆன்மிகம் அல்ல, அதை இறைவன் விரும்புவதுமில்லை, இறைவனை மனதார உண்மையாக வழிப்பட்டு வந்தாலே இதுவும் ஒருவித உண்மையான ஆன்மிகமாகும்.

பெரியவர்களை மதிப்பது, அவர்களிடம் அன்பாக பேசுவது, அனைவரிடமும் மதிப்புடனும், மரியாதையுடனும் நடந்துகொள்வது ஒருவித ஆன்மிகமாகும்.

உட்ச்சக்கட்ட ஆன்மிகம் என்பது நாம் எந்த ஒரு செயல்கள் செய்து வந்தாலும், அது நிறைவேறிவிட்டது என்றால். கடவுளால் தான் நிறைவேற்றிவிட்டது என்று நினைத்துக்கொண்டு, அந்த செயலின் பலனை உடனே கடவுளுக்கு சமர்ப்பணம் செய்வதே உட்ச்சக்கட்ட ஆன்மிகமாகும்.

அதேபோல் கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்ற பழமொழியும் இருக்கிறது. எனவே இதனுடைய அடிப்படையாக கொண்டு இந்த உலகில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்து வாழ்ந்து வந்தால், கடவுளை நெருங்கி வந்து கொண்டுருக்கிறீகள் என்று அர்த்தம்.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement