வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உலகம் வேறு பெயர்கள் | Ulagam Other Names in Tamil

Updated On: December 3, 2025 3:13 PM
Follow Us:
Ulagam Other Names in Tamil
---Advertisement---
Advertisement

புவி வேறு பெயர்கள் | Puvi Veru Peyargal in Tamil

உலகம் வேறு பெயர்கள்: ஒரு பொருள் என்று எடுத்துக்கொண்டாலே அதற்கு பெயர் கண்டிப்பாக இருக்கும். உதாரணத்திற்கு மனிதன் என்றாலே அவர்களுக்கென்று தனி பெயர் கட்டாயம் வைத்திருப்பார்கள். பறவை இனத்திற்கு தனி தனியாக வெவ்வேறு பெயர்கள் இருக்கும், விலங்கினத்திற்கு தனி வகையான பெயர்கள், பூமி பரப்பின் மிகப்பெரியதாக கொண்டிருக்கும் கடலுக்கு வெவ்வேறு பெயர்கள், பூக்களுக்கு வேறு பெயர்கள் என்று அனைத்து உயிருள்ளவைகளுக்கும் பெயர்கள் உள்ளன.

அவற்றை பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்க மாட்டோம். தெரிந்த வார்த்தைகளை மட்டும் கூறுவோம். நம்முடைய தமிழ் வார்த்தைகளில் இவ்வொரு வார்த்தைக்கும் பல வார்த்தைகள் இருக்கிறது.அந்த வகையில் உலகத்திற்கு பல பெயர்கள் உள்ளன. அவற்றை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!

கடலுக்கு வேறு பெயர் என்ன?

உலகம் என்றால் என்ன:

World Earth Day,Earth Day 2019: உலக பூமி தினம்; மாசற்ற சூழலை உருவாக்க கரம்  கோர்ப்போம் - world earth day 2019 eco friendly things you can do on this  day - Samayam Tamil

பொதுவாக உலகம் என்பது இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிரினங்களும் வாழ கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக மனித அனுபவம், வரலாறு, அல்லது பொதுவாக மனிதர் நிலையைக் குறிப்பதாகும். பொதுவாக உலகம் அண்டத்தின் மனிதர் வாழ கூடிய கோள்களையும் குறிக்கிறது.

இந்த உலகத்தில் நீர்கள் நிலங்கள் மற்றும் ஆகாயம் இவை மூன்றும் சூழப்பட்டு இருக்கின்றன உலகத்தை புவி என்றும் அல்லது பூமி என்றும் கூட அழைப்பார்கள் ஏனெனில் மக்கள் பூமியில் தான் அதிகம் வாழ்கின்ற காரணத்தினால் பூமி என்று கூறுவார்கள். உலகம் என்ற வார்த்தைக்கு நிறைய அர்த்தங்கள் மற்றும் நிறைய சொற்கள் இருக்கிறது. அவற்றை கீழே பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

உலகம் என்பதன் உண்மையானப் பொருள் என்ன.?

உல் – என்ற மூலச்சொல்லிலிருந்து உருவான சொல்லே உலகம்.

உல் – உலா= சுற்றிவருதல்.
உல் – உல – உலவு – உலாவு.
உலவுதல் = வளைதல், வட்டமாதல்,சுற்றுதல், திரிதல்.
உலவு – உலகு = உருண்டையாயிருப்பது. சுற்றிவருவது.
உல் +து = உத்து – உற்று – சுற்று.
உழல் – சுழல் ( அகரம் சகரமாகத் திரிவது போல, உகரம் சுகரமாகத் திரியும்).
உழலுதல் – சுழலுதல் = அலைதல், சுற்றுதல்.

உலகம் ஆங்கிலம் பெயர்கள்:

  • World
  • Earth
  • Universe
  • Mankind /Humanity
  • Cosmos

உலகம் வேறு பெயர்கள்:

உகம்  குவலயம் 
குவவு  ஞாலம் 
பார்  பொழில் 
புடவி  பூழில் 
பொறை  நீரகம் 
கிடக்கை  மண்ணுலகு 
மண்ணகம்  இருநிலம் 
வையம்  மேதினி 
அகிலம்  அவனி 
தரணி  காசினி 

Ulagam Veru Sol:

புவி  பூவுலகு 
உலகு  பூமி 
பிருதுவி  அகலிடம் 
அசலை  நேமி 
அகிலம்  அளக்கர் 
வசுந்தரை  தலம் 
தாத்திரி  கிடக்கை 
மகி  தரை 
தரித்திரி மண் 
கோத்திரி  சதுக்கோணி
அண்டம்
கதிரவன் வேறு பெயர்கள்..!

Ulagam Other Names in Tamil:

தறை  பாத்திபம் 
சக்கரம்  நிலம் 
சலாம்பரி  மாதிரம் 
விமலை  வசுதை 
தாலம்  இம்பர் 
வையம்  சாந்தை 
விசுவம்  பாலம் 
நகம்  பூதியம் 
ஏமாங்கி வையகம் 
இகம்  பவனி 
மேதினி  சகம் 
புவனம் 
இதுபோன்று குழந்தை நலன் பற்றிய மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> பெயர்கள் தமிழ்
Advertisement

Santhiya Annadurai

வணக்கம் என் பேர் சந்தியா, எனக்கு எழுதுவது மிகவும் பிடிக்கும், Pothunalam.com இல் எனக்கு பிடித்த சமையல் குறிப்பு, தமிழ் சார்ந்த தகவல், தொழில் சார்ந்த தகவல்கள், ஆரோக்கியம் மற்றும் அழகு குறிப்பு போன்ற செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now