சார்பெழுத்துகள் என்றால் என்ன? | Sarbeluthu Endral Enna in Tamil

Sarbeluthu Endral Enna in Tamil

சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் | Sarbeluthu Vagaigal in Tamil

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் சார்பெழுத்துக்கள் என்றால் என்ன? மற்றும் அதன் வகைகளை தெரிந்துக்கொள்வோம். படிக்கும் மாணவர்களுக்கு இலக்கணம் என்றாலே மிகவம் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் இலக்கணத்தில் தான் எளிமையாக மதிப்பெண்களை பெறலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இந்த பதிவில் இலக்கண வகையை சார்ந்த சார்பெழுத்துகள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

அணி இலக்கணம்

சார்பெழுத்துகள் என்றால் என்ன:

தனித்து இயங்கும் ஆற்றலின்றி முதலெழுத்தைச் சார்ந்து வருபவை சார்பெழுத்துகள் எனப்படும்.

சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்:

 1. உயிர்மெய்
 2. ஆய்தம்
 3. உயிரளபெடை
 4. ஒற்றளபெடை
 5. குற்றியலுகரம்
 6. குற்றியலிகரம்
 7. ஐகாரக்குறுக்கம்
 8. ஒளகாரக் குறுக்கம்
 9. மகரக்குறுக்கம்
 10. ஆய்தக்குறுக்கம்

உயிர் மெய் எழுத்துக்கள் என்றால் என்ன:

ஓர் உயிரெழுத்துடன் ஒரு மெய்யெழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

எடுத்துக்காட்டு:

 • க் + அ = க
 • க் + ஆ = கா
 • க் + ஈ = கீ
  க்’ எனும் மெய்யெழுத்து ‘அ, ஆ மற்றும் ஈ’ போன்ற உயிரெழுத்துக்களுடன் சேரும் போது ‘க, கா மற்றும் கீ’ போன்ற உயிர் மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன.

ஆயுத எழுத்து என்றால் என்ன:

மூன்று புள்ளிகள் இருந்தால் அவற்றை நாம் ஆயுத எழுத்து என்று சொல்கிறோம். ஆயுத எழுத்து 3 புள்ளிகளைப் பெற்றிருப்பதால் இது முப்பாற்புள்ளி, முப்புள்ளி எனவும் வழஙப்படுகிறது.

ஆய்த எழுத்தானது தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரும். இவ்வாறு தனித்து வரும் ஆற்றல் இல்லாததினால் இது சார்பெழுத்தாயிற்று.

எடுத்துக்காட்டு:

 • அ ஃ து – ‘அ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
 • இ ஃ து – ‘இ’ குறில். ‘து’ வல்லின உயிர்மெய்
 • எ ஃ கு – ‘எ’ குறில். ‘கு’ வல்லின உயிர்மெய்

உயிரளபெடை என்றால் என்ன:

உயிரளபெடை என்பது உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பது. மொழி முதல், இடை, கடை ஆகிய மூன்று இடங்களிலும் உயிர்நெடில் அளபெடுக்கும்.

எடுத்துக்காட்டு:

 • ஓஒதல் வேண்டும் – முதல்
 • கெடுப்பதூஉம் கெட்டார்க்கு – இடை
 • நல்ல படாஅ பறை – கடை
பகுபத உறுப்பிலக்கணம்

ஒற்றளபெடை என்றால் என்ன: 

ஒற்றெழுத்து என்பது தனக்குரிய அரை மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பது, ஒற்றளபெடை எனப்படும்.

ஒற்றளபெடை என்பது செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளில் ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல் ,ள் என்பனவும் ஆய்தமும் (ஃ) மொழிக்கு இடை, கடை ஆகிய இடங்களில் குறிற்கீழும் குறிலிணையின் கீழும் அளபெடுப்பதேயாகும்.

எடுத்துக்காட்டு:

 • வெஃஃகு வார்க்கில்லை – குறிற்கீழ் இடை
 • கலங்ங்கு நெஞ்ச்மிலை – குறிலிணைகீழ் இடை

குற்றியலுகரம் என்றால் என்ன:

ஒரு தமிழ்ச் சொல்லில் உள்ள உகரம் ஏறிய வல்லின எழுத்து (எ.கா : கு, சு, டு, து) சொல்லின் கடைசி எழுத்தாக வரும் பொழுது, மற்ற குறில் உயிர்மெய் எழுத்துக்கள் (எ.கா: ற, கி, பெ, ) போல் ஒரு மாத்திரை அல்லாமல் அரை மாத்திரை அளவாகக் குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும்.

எடுத்துக்காட்டு:

 • காடு: இந்த சொல்லில் கடைசியில் வரும் டு எனும் எழுத்து (உகரம் ஏறிய ட் என்னும் வல்லின எழுத்து (ட்+உ= டு)), தன் இயல்பான ஒரு மாத்திரை அளவு நீட்டிக்காமல், அரை மாத்திரை அளவே ஒலிக்கும்.
 • இதில் தனி நெடிலுடன் (கா), வல்லின மெய்யோடு (ட்) சேர்ந்த உகரம் (டு) வந்துள்ளது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil