திருமணத்திற்கு எவ்வளவு சீர்வரிசை பொருட்கள் இருக்க வேண்டும் தெரியுமா? | Seer Varisai Thattu Items List in Tamil

Seer Varisai Thattu Items List in Tamil

சீர்வரிசை பொருட்கள் பட்டியல் | Kalyana Seer Varisai Seer Varisai Thattu Items List in Tamil 

அனைத்து பொதுநலம்.காம் வாசகர்களுக்கும் வணக்கம்..! இன்று தமிழ் பதிவில்  சீர்வரிசை பொருட்களை பற்றி பார்க்கப் போகிறோம்..? பொதுவாக வீட்டில் உள்ள பெண்ணுக்கு கல்யாணம் என்றால் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா..! பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். வீட்டை கட்டி பார், கல்யாணம் பண்ணி பார் என்று சொல்லிருப்பார்கள். ஏனென்றால் அதில் உள்ள விஷயங்கள் பெரிது.

ஒரு ஆணுக்கு கல்யாணம் என்றால் அவர்கள் வீட்டில்  அதில் உள்ள விஷயங்கள் ஒரு பெண்ணின் வீட்டில் அமையாது. அவர்களுக்கு தான் செலவுகளும் அதிகம் அலைச்சலும் அதிகம். அதற்கு முதல் காரணம் சீர்வரிசை தான். என்ன தான் இந்த காலத்தில் சீர்வரிசை வேண்டாம் என்றாலும் அதனை குறையில்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள் தாய் தந்தை. அந்த சீர்வரிசை எவ்வளவு வாங்க வேண்டும் எத்தனை வாங்க வேண்டும் என்று நிறைய பொருட்கள் உள்ளது அதனை இப்போது பார்ப்போம் வாங்க.

சீர் எத்தனை வகைப்படும்:

திருமணம் என்றால் ஒரு பெண்ணுக்கு ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்குவார்கள். ஒரு பெண் முதலில் அந்த வீட்டிற்கு சென்றவுடன் ஏற்றும் விளக்கு முதல் அவள் குழந்தைக்கு பாலாடை முதல் வாங்குவார்கள். அதனை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம்.

இந்த காலகட்டத்தில் அவர்களின் சக்திக்கு முடிந்த சீர்வரிசை பொருட்கள் வாங்கி கொடுக்கலாம்.

திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் தர்றாங்க தெரியுமா?

பூஜை பொருட்கள்:

  • உருளி
  • ஊதுபத்தி ஸ்டென்ட்
  • சந்தகுழாய்
  • குங்குமம் குழாய்
  • காமாச்சி விளக்கு
  • குத்துவிளக்கு
  • பஞ்ச பாத்திரம்
  • குபேரவிளக்கு
  • மண்ணெண்ணெய் விளக்கு
  • பூஜை செம்பு
  • துவக்கால்
  • மணி

பித்தளை பொருட்கள்:

  • பித்தளை குவலை
  • பித்தளை குடம்
  • பித்தளை தவலை
  • படி
  • தண்ணீர் குடிக்கும் பாத்திரம்
  • அர்ச்சனை கூடை
  • தாம்பாளம்
  • சல்லடை

சில்வர் பொருட்கள் :

  • குழம்பு வைக்கும் பாத்திரம்
  • ரசம் வைக்கும் பாத்திரம்
  • காடாய்
  • பால்காய்ச்சும் பாத்திரம்
  • மேசன் கரண்டி
  • குளிக்கரண்டி
  • தோசை கரண்டி
  • அண்ண கரண்டி
  • ஜல்லி கரண்டி
  • தாளிப்பு கரண்டி
  • தேக்கரண்டி
  • சில்வர் தவலை
  • அரிக்கன் சட்டி
  • சில்வர் குடம்
  • செம்பு
  • டம்ளர்
  • தட்டு
  • கேரியர்
  • இட்லி பானை
  • டிபன் பாக்ஸ்

இதை தவிர விட்டு அழகு பொருட்கள் அவரவர் தகுதிக்கு ஏற்றது போல் வாங்கி கொடுப்பார்கள். அதாவது அதனை தெளிவாக காண்போம்.

  • கட்டில்
  • பீரோ
  • டிவி
  • கிரைண்டர்
  • மிக்சி
  • மெத்தை
  • தலையணை
  • வாகனம்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com