நன்னூல் விளக்கம் | Nannool Vilakkam
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் நன்னூல் பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். நன்னூல் பற்றி நம்மில் பலருக்கும் தெரியாது. ஆகையால், அதனை பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும். தொல்காப்பியத்தையும், இளம்பூரனாரின் தொல்காப்பிய உரையையும் வழி நூலாக கொண்டு எழுதப்பட்டது தான் நன்னூல்.
நம்முடைய தமிழ் மொழியில் புலவர்களால் எழுதப்பட்ட ஒவ்வொரு இலக்கண நூல்களும் ஒவ்வொரு சிறப்பினை பெற்றுள்ளது. ஒவ்வொரு இலக்கணமும் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களுக்கும், இன்றைய கால கட்டத்தில் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றன. அப்படி படைக்கப்பட்ட இலக்கண நூல்களில் ஒன்று தான் நன்னூல், நாம் இந்த பதிவில் நன்னூல் விளக்கம், அதன் ஆசிரியர் யார் மற்றும் இந்த நூலின் பகுதிகள் பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம் வாங்க.
நன்னூல் ஆசிரியர் குறிப்பு:
- தொல்காப்பியத்தையும், இளம்பூரனாரின் தொல்காப்பிய உரையையும் வழி நூலாக கொண்டு எழுதப்பட்ட நூல் நன்னூல் ஆகும். சீயகங்கன் என்னும் சிற்றரசனின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நூல் பவணந்தி முனிவரால் 13-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூலாகும்.
- பவணந்தி முனிவர் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்றும் இவர் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்றும் கருதப்படுகிறது. இவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
நூலின் பகுதிகள் – நன்னூல் விளக்கம்:
- இந்த நூல் இரு அதிகாரங்களை உடையது. தொல்காப்பியத்தை வழி நூலாக கொண்டு எழுதப்பட்ட இந்த நூலிலும் 5 அதிகாரங்கள் இருந்தன என்றும் 3 அதிகாரங்கள் பல காரணங்களுக்காக தொலைந்து போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
- பாயிரம்
- எழுத்ததிகாரம்
- சொல்லதிகாரம்
- 462 நூற்பாக்களை உடைய இந்த நூல் மூன்று பகுதிகளை உடையது. 7 நூற்பாக்கள் தொல்காப்பியத்தில் இருந்து பெறப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
நன்னூல் பாயிரம் விளக்கம்:
- பாயிரம் என்பது பண்டைய தமிழ் நூல்களிலும், தமிழ் மரபைத் தழுவி இந்த காலத்தில் அமையும் முன்னுரை போல் ஒரு பகுதியாகும். இது பொதுவாக பாடலாகவே அமைந்திருக்கும். பாயிரம் என்பதற்கு வரலாறு என்று பொருள். நூலில் உள்ள பொருளை கூறுவது பாயிரம்.
- சிறப்புப்பாயிரம் மற்றும் பொதுப்பாயிரம் எனும் இரண்டு வகைகளையும், நூலின் முன்னுரையாகவும் இருப்பது இந்த நூலின் சிறப்பாக கருதப்படுகிறது.
- நன்னூலுக்குரிய இலக்கணங்கள் எவை, ஆசிரியர் மற்றும் மாணாக்கர் ஆகியோரது தன்மை போன்றவை இதில் கூறப்படுகின்றன.
பொதுப்பாயிரத்தின் உறுப்புகள்:
- நூலினது வரலாறு
- ஆசிரியரின் வரலாறு
- பாடஞ் சொல்லலினது வரலாறு
- மாணாக்கனது வரலாறு
- பாடங் கேட்டலின் வரலாறு
எழுத்ததிகாரம் – நன்னூல் ஆசிரியர்
- இந்த அதிகாரத்தில் எழுத்து, பதம், புணர்ச்சி போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன. தொல்காப்பியரின் கருத்துக்கள் இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன.
- எழுத்ததிகாரம் மொத்தம் 202 நூற்பாக்களையும், ஐந்து பகுதிகளையும் உடையது. அவை
- எழுத்தியல்
- பதவியல்
- உயிரீற்றுப் புணரியல்
- மெய்யீற்றுப் புணரியல்
- உருபு புணரியல்
- எழுத்தியல் 72 நூற்பாக்களை உடையது. பதவியல் 23 நூற்பாக்களை உடையது. உயிரீற்றுப் புணரியல் 53 நூற்பாக்களை உடையது. மெய்யீற்றுப் புணரியல் 36 நூற்பாக்களை உடையது. உருபு புணரியல் 18 நூற்பாக்களை உடையது.
நன்னூல் சொல்லதிகாரம்:
- தொல்காப்பியத்தில் உள்ள கருத்துக்கள் ஒன்பது இயல்களில் கூறப்பட்டிருக்கும், நன்னூலில் நான்கு இயல்களில் கூறப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் கூறப்பட்டிருக்கும் நன்னூலில் பொருள் இலக்கணம் பற்றி கூறவில்லை.
- சொல்லதிகாரம் 205 நூற்பாக்களையும், ஐந்து பகுதிகளையும் கொண்டுள்ளது. சொல்லதிகாரத்தின் ஐந்து பகுதிகள்
- பெயரியல்
- வினையியல்
- பொதுவியல்
- இடையியல்
- உரியியல்
- பெயரியல் 62 நூற்பாக்களை உடையது. வினையியல் 32 நூற்பாக்களை உடையது. பொதுவியல் 68 நூற்பாக்களை உடையது. இடையியல் 22 நூற்பாக்களை உடையது. உரியியல் 21 நூற்பாக்களை உடையது.
ஐங்குறுநூறு விளக்கம் |
பதினெண் மேற்கணக்கு நூல்கள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |