மணிமேகலை நூல்
வணக்கம் நண்பர்களே..! இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் மணிமேகலை நூல் குறிப்புகளை பற்றித் தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். மணிமேகலை தமிழில் மிக சிறந்து விளங்கும் ஒரு நூலாகும். மணிமேகலையில் பல காலமாக முரண்பாடு கருத்துக்கள் இருந்துவருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவை நியாயப் பிரவேசம் என்ற நூலை அடிப்படையாக கணிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. பண்டைய நூல்களில் மணிமேகலையானது பழமொழிகளிலும் வருகிறது. மேலும் மணிமேகலை நூலின் குறிப்புகள், அதன் ஆசிரியர் மற்றும் பெயர் காரணகளை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
சிலப்பதிகாரம் சிறப்புகள் |
மணிமேகலை நூல் குறிப்பு:
மணிமேகலையானது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகும். சிலப்பத்திகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியவை ஐந்திணை தமிழ் இலக்கியம் என்றும் அழைக்கப்படுகிறது.
மணிமேகலையும், சிலப்பதிகாரத்தையும் இரட்டை காப்பியங்கள் என்றும் அழைப்பார்கள். மணிமேகலை நூலானது பௌத்த சமய கொள்கைகளை குறிப்பிடும் நூலாகும்.
மணிமேகலையில் மொத்தம் 30 காதைகள் இடம்பெற்றுள்ளன. இதனுடைய பாவகை நிலைமண்டில ஆசிரியப்பாவை உடையது. இவை பௌத்த சமயத்தை கொண்டுள்ளது.
இந்த நூலில் காண்டப்பிரிவுகள் எதுவும் இல்லை இதில் முதல் காதையில் விழாவறைக் காதையையும் இறுதி காதையில் பவத்திறம் அறுக எனப் பாவை நோற்ற காதையையும் கொண்டுள்ளது.
மணிமேகலை ஆசிரியர் குறிப்பு:
மணிமேகலை நூலை இயற்றியவர் சீத்தலை சாத்தனார் ஆவார், இவரை சுருக்கமாக சாத்தனார் என்று அழைப்பார்கள். இவரை தண்டமிழ் ஆசான் என்றும் சாத்தன் நன்னூற்புலவன் என்றும் புகழ்வார்கள்.
இவர் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள சீத்தலை என்னும் ஊரில் பிறந்து அதன் பிறகு மதுரையில் வாழ்ந்திருக்கிறார். இவர் கூலவாணிகத்தையும் செய்த்திருக்கிறார்.
மணிமேகலை நூல் அமைப்பு:
மணிமேகலை நூலானது இரட்டை காப்பியங்களின் கிளைக்கதைகள் கொண்ட நூல் என்றும் இரட்டை காப்பியத்துள் பிறமொழி கலப்பு நூல் என்றும் அழைக்கபடுக்கிறது. கதையின் தலைவின் பெயரை கொண்ட முதல் நூல் இதுவே ஆகும்.
அதுமட்டுமின்றி தொல்காப்பியர் பயன்படுத்திய எட்டு அணிகளுடன் மடக்கணி, சிலேடையணி ஆகிய இரண்டையும் பயன்படுத்திய முதல் காப்பியம் இதுவே ஆகும்.
திருவள்ளுவரை பொய்யில் புலவன் என்றும் திருக்குறளை பொருளுரை என்றும் கூறிய முதல் காப்பியம் இதுவே ஆகும்.
பிற மொழி சொற்களை அதிகமாக பயன்படுத்திய நூலும் இதே ஆகும். சிலப்பத்திகாரத்தில் தொடர்ச்சியாகவே மணிமேகலை அமைந்துள்ளது. இந்த நூலின் காப்பியத்தை சீத்தலை சாத்தனார் இளங்கோவடிகள் முன்னிலையில் இந்நூலை இயற்றினார்.
மணிமேகலை வேறு பெயர்கள்:
- மணி மேகலைத் துறவு
- முதல் சமயக் காப்பியம்
- அறக்காப்பியம்
- சீர்திருத்தக்காப்பியம்
- குறிக்கோள் காப்பியம்
- புரட்சிக்காப்பியம்
- சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
- கதை களஞ்சியக் காப்பியம்
- பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
- பசு போற்றும் காப்பியம்
- இயற்றமிழ்க் காப்பியம்
- துறவுக் காப்பியம்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |