முல்லைத் திணை விளக்கம் | Mullai Thinai in Tamil

Mullai Thinai in Tamil

முல்லை நிலம் பற்றி | Mullai Thinai Details in Tamil 

திணைகளில் மொத்தம் 5 வகை உள்ளன. அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளது. ஐந்திணைகளில் இந்த பதிவில் முல்லை நிலத்தின் சிறப்புகளை பற்றி படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். முல்லையானது மலர் குடும்பத்தில் கொடிப்பூ வகையினை சேர்ந்தது. மலரினங்களில் நறுமணமும், தூய்மையும் கொண்டது முல்லை. இந்த பதிவில் முல்லை நிலத்தின் சிறப்புகளையும், முல்லை நிலத்திற்கான உணவு, மரம், விலங்கு போன்ற முல்லை நிலம் பற்றிய விவரங்களை படித்து தெரிந்துகொள்ளுவோம் வாங்க.

ஐவகை நிலங்கள்

முல்லை திணை:

காடும் காடு சார்ந்த இடத்தை தான் முல்லை திணை என்று கூறுகிறார்கள். முல்லைத்திணை நிலத்தில் மக்கள் உழுது வரகும், தினையும் விளைவிப்பார்கள். இந்த நிலத்தில் உள்ள பெண்கள் ஆண்கள் காலில் அணியும் அணிகலனை வீரத்தின் வெளிப்பாடாக சொல்வார்கள்.

முல்லை நில உரிப்பொருள்:

முதல், கரு, உரிப்பொருளுள் முதல்பொருள், கருப்பொருள்களை விட உரிப்பொருள்களே சிறந்தது. முல்லை திணைக்குரிய உரிப்பொருள் “இருத்தலும் இருத்தல் நிமித்தமும்” என்பதாகும்.

முல்லை நிலம் உணவு:

முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் அங்கு கிடைக்கக்கூடிய இயற்கையான உணவுகளை தான் உண்டு வாழ்ந்து வந்தார்கள்.

முல்லை நிலம் விலங்கு:

முல்லை நில விலங்குகள் யானை, பிடி, மான், மடப்பிணை, கலிமா, கலை, இரலை, குறுநரி, பன்றி, முயல் இவைகள் தான் முல்லை நிலத்திற்கான விலங்குகள்.

முல்லை நிலம் மரம்:

முல்லை நிலத்திற்கான மரம் ஆர், ஈங்கை, கொன்றை, தோன்றி, வாழை, வேங்கை போன்றவைகள் தான் முல்லை நிலத்திற்கான மர வகையாகும். மேலும் கள்ளி, முகண்டை, நெல், அவரை, பகன்றை போன்ற கொடி வகைகளும் முல்லை நிலத்திற்குரியது.

முல்லை நிலம் தொழில்:

முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆநிரை மேய்த்தலையும், உழவு தொழில், வரகு விதைக்கும் தொழிலை மேற்கொண்டு வந்தார்கள்.

முல்லை நிலம் தெய்வம்:

முல்லை நிலத்திற்குரிய கடவுள் திருமால் மாயோன். முல்லை நிலத்திற்குரிய கடவுள் புறநானுறு, பெரும்பாணாற்றுப்படை, கலித்தொகை போன்ற நூல் வகைகளில் கடவுளாக போற்றப்படுகிறது.

முல்லை காலம்:

முல்லைக்குரிய பெரும்பொழுது கார்காலம், சிறுபொழுது மாலை. கார்காலமானது பிரிந்துசென்ற தலைமகனுக்கும், வீட்டில் இருக்கும் தலைமகளுக்கும் தனிமையை ஏற்படுத்தும் காலமாகும்.

முல்லை நிலம் கருப்பொருள்:

தெய்வம் மாயோன் 
மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் 1
உணவு வரகு, சாமை 
பறவைகள் புள் (கருடன்), காட்டுக்கோழி 
விலங்குகள் மான், முயல், பசு, ஆடு, மரை 
நீர்நிலை காட்டாறு 
மரங்கள் கொய்யா, காயா, குருத்து 
மலர்கள் முல்லை, பீடா, தொன்றி 
பண் பறை, முல்லை யாழ் 
பறை ஏறுகோள் 
தொழில் சாமை வரகு விதைத்தல், களை எடுத்தல், குழலூதல், ஏறு தழுவுதல், குரவை கூத்தாடல், மந்தை மேய்த்தல்  
ஊர் பாடி 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil