வல்லினம் மிகும் இடங்கள் யாவை? | Vallinam Migum Idangal in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய இலக்கணம் சார்ந்த பகுதியில் வல்லினம் மிகும் இடங்களை பற்றி பார்ப்போம். தமிழ் பாடத்தில் மிகவும் முக்கியமாக பகுதியாக இருப்பது இலக்கணம் தான். இலக்கணத்தை எளிமையாக புரிந்துகொண்டால் முழு மதிப்பெண்களை அதில் பெறலாம். நாம் இந்த பதிவில் வல்லினம் மிகும் இடங்கள் என்றால் என்ன? அதற்கு சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம் வாங்க..
வல்லினம் மெல்லினம் இடையினம் என்றால் என்ன? |
வல்லினம் மிகும் இடங்கள் என்றால் என்ன?
வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும் போது முதல் சொல்லின் (நிலைமொழி) இறுதியில் ஒரு வல்லின எழுத்துச் சேர்வதைக் குறிக்கும்.
ஒரு நிலைமொழியோடு வருமொழி க, ச, த, ப வருக்க எழுத்துகளில் தொடங்குஞ் சொல்லாக அமையும்பொழுது அவ்வல்லொற்று சிலவிடங்களில் மிகுந்தும் சிலவிடங்களில் மிகாமலும் வரும். இவற்றையறிந்து பயன்படுத்தாமையைச் சந்திப்பிழையெனக் கூறுவர்.
குற்றியலுகரம் என்றால் என்ன? |
வல்லினம் மிகும் இடங்கள் எடுத்துக்காட்டு:
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் வல்லினம் மிகும்.
எடுத்துக்காட்டு 1:
- அச்சட்டை.
- இந்தக்காலம்.
- எத்திசை?
- எந்தப்பணம்?
எடுத்துக்காட்டு 2:
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
- கதவைத்திற.
- தகவல்களைத்திரட்டு.
- காட்சியைப்பார்.
எடுத்துக்காட்டு 3:
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும்.
- முதியவருக்குக்கொடு.
- மெட்டுக்குப்பாட்டு.
- ஊருக்குச் செல்.
பகுபத உறுப்பிலக்கணம் |
எடுத்துக்காட்டு 4:
என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் வல்லினம் மிகும்.
- எனக்கேட்டார்.
- வருவதாகக்கூறு.
எடுத்துக்காட்டு 5:
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
- அதற்குச் சொன்னேன்
- இதற்குக் கொடு
- எதற்குக் கேட்கிறாய்?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |