வாரிசு சான்றிதழ்
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் வாரிசு சான்றிதழ் என்றால் என்ன, அவை எதற்காக பயன்படுத்தப்டுகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாகவே ஒவ்வொரு குடும்பங்களிலும், வாரிசு என்று ஒரு குழந்தையாவது இருக்கும், அந்த குழந்தை வளர்ந்து அதற்கு ஒரு திருமணம் ஆனதும், அவர்களுக்கு ஒரு குழந்தை பிறக்கும், இப்படி வாரிசாக வரும் தலைமுறைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதுதான் வாரிசு சான்றிதழ் ஆகும். மேலும் இந்த வாரிசு சான்றிதழ் எதற்காக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள் |
வாரிசு சான்றிதழ் என்றால் என்ன?
வாரிசு சான்றிதழ் என்பது ஒரு குடும்ப தலைவரோ, தலைவியோ இறந்து விட்டால், அவர்களின் சொத்துக்களையும் பணங்களையும் வட்டாட்சியரின் அலுவலகத்தில் வழங்கப்படும் சான்றிதழ் தான் வாரிசு சான்றிதழ் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒருவர் இறந்தவுடன் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லாமல் வாரிசுகள் பகிர்ந்து கொள்வதற்காக பயன்படுவதுதான் வாரிசு சான்றிதழ் ஆகும்.
வாரிசு சான்றிதழ் எதற்காக பயன்படுகிறது:
இந்த சான்றிதழானது நிதி நிறுவங்கள் , வங்கிகள் சேமிப்பு, வைப்பு தொகையைப் பெற மற்றும் கருணை அடிப்படையில் இறந்தவரின் பெயரை கொண்டு வேலை பெறுவது எனப் பலவிதங்களில் இந்த வாரிசு சான்றிதழ் பயன்படுகிறது.
இறந்தவரின் சொத்துக்களை அடமானம் வைப்பதற்கு மற்றும் விற்பது போன்றவற்றிக்கு வாரிசு சான்றிதழ் முக்கியமாக இருக்கின்றது.
பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது அரசு பணியில் வேலை புரிந்து வந்தவர்கள் இறந்துவிட்டால் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணியின் பலன்கள் பெறுவதற்கும் பட்டா போன்ற வருவாய் ஆவணங்களுக்கு பெயர் மாற்றங்கள் செய்வதற்காகவும் இவை பயன்படுத்தப்படுகிறது.
வாரிசு சான்றிதழ்களை எப்படி வாங்குவது?
பொதுவாகவே சாதி சான்றிதழ்களை வாங்குவதற்கு உள்ள நடைமுறைதான் இதற்கும். வாரிசு சான்றுதழ்களை வாங்குவதற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வாரிசு சான்றுதழ்களை பெறுவதற்கான படிவத்தை பெற்றுக்கொண்டு, அந்த படிவத்தில் கேட்கப்பற்றிருக்கும் கோரிக்கைகைகைள் பூர்த்தி செய்துகொண்டு, அடுத்ததாக இறந்தவரின் இறப்பு சான்றிதழ், அவர்களின் வாரிசுகள் பற்றிய விவரம் மற்றும் அவர்களின் இருப்பிட சான்றுதழ்கள் போன்றவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றை விண்ணப்பித்த பிறகு கிராம நிர்வாகத்தின் அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலமாக விசாரணை நடத்திய பிறகு வட்டாசியரால் வாரிசு சான்றிதழ் பெறப்படும். மேலும் இந்த வாரிசு சான்றிதழ்களை பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக கூட விண்ணப்பிக்கலாம்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |