2022 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வென்ற தமிழர்கள் யார்..?

Advertisement

Padma Award Tamil Winners List in Tamil

அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் உயரிய விருதுகளில் பத்ம ஸ்ரீ விருதும் ஒன்று. 2022 ஆம் ஆண்டு மொத்தம் 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் நம் தமிழ்நாட்டை சேர்ந்த 7 தமிழர்கள் பத்ம ஸ்ரீ விருது பெறும் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு பத்ம விருதுகளை வென்றுள்ளனர். அவர்கள் யார் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

சாகித்திய அகாதமி விருது பட்டியல் | Sahitya Akademi Award Tamil

பத்ம ஸ்ரீ விருதுகள் வென்ற தமிழர்கள் யார்..?

முத்து கண்ணம்மாள்:

முத்து கண்ணம்மாள்

இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை என்ற ஊரை சேர்ந்தவர். இவர் சதிராட்ட நடனக் கலைஞர் ஆவார். 84 வயதான இவர் தமிழகத்தின் கடைசி தேவதாசி என்று சொல்லப்படுகிறார்.

முத்து கண்ணம்மாள் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு தக்‌ஷிண சித்ரா விருது பெற்றுள்ளார். அதுபோல,  இவருடைய சதிராட்ட நடனதிற்காக இவருக்கு 2022 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

ஏ.கே.சி. நடராஜன்: 

ஏ.கே.சி. நடராஜன்

இவர் மேலைநாட்டுக் இசைக் கருவியான கிளாரிநெட்டை மரு உறுவாக்கம் செய்தவர். கிளாரிநெட் கருவியில் இருந்த பொத்தான்களை கர்நாடக இசைக்கேற்ப மாற்றியமைத்து அதில் பல்வேறு இசை வடிவங்களை வாசித்தவர்.

ஏ.கே.சி. நடராஜன் அவர்கள் சென்னை மியூஸிகல் அகாடமியில் சங்கீத கலாநிதி என்ற பட்டம் பெற்றவர்.  திருச்சியைச் சேர்ந்த இவரின் நாதஸ்வரத்திற்கு 2022 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.  

சிற்பி பாலசுப்பிரமணியம்: 

சிற்பி பாலசுப்பிரமணியம்

இவர் புகழ் பெற்ற தமிழ் கவிஞர், எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர் மற்றும் தமிழ் அறிஞர் என்று சொல்லிக் கொண்டே போகலாம். பாலசுப்பிரமணியம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறை தலைவராக பணியாற்றி வந்தார்.

இவர் எழுதிய நூல்கள் இவருக்கு இரு முறை சாகித்ய அகாடமி விருதை பெற்று தந்தது. அதுபோல நம் தமிழ்நாட்டை சேர்ந்த இவரை பெருமைப்படுத்தும் வகையில் இவருக்கு 2022 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.  

இசை துறையின் உயரிய விருது என்ன?

செளகார் ஜானகி: 

செளகார் ஜானகி

செளகார் ஜானகி அவர்கள் தென்னிந்திய சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வந்தவர். இவர் தனது 18 வயதில் இருந்து தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் 450 -கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

 தனித்துவமான நடிப்பின் மூலமாக பல்வேறு பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த இவருக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.  

பல்லேஷ் பதந்திரி:

பல்லேஷ் பதந்திரி

பல்லேஷ் பஜந்திரி அவர்கள் உலகில் சிறந்த இசைக் கலைஞர்களுள் ஒருவர். இவர் கஜல் பாடகர், செனாய் இசை கலைஞர் ஆவார். தமிழத்தின் கலைமாமணி விருது மற்றும் கர்நாடகவின் கலாஸ்ரீ உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். ஹிந்துஸ்தானி இசையில் தன்னிரகற்று விளங்கும் இவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கியது.

எஸ். தாமோதரன்:

எஸ். தாமோதரன்

திருச்சி மாவட்டம் உறையூரைச் சேர்ந்த இவர் 1987ல் “கிராமாலயா” எனும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் சுகாதாரத் திட்டங்களை முன்னெடுத்து வந்தவர். இவரின் சமூக பணிக்காக பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

வீராச்சாமி சேஷய்யா:

வீராசாமி சேஷய்யா

வீராச்சாமி சேஷய்யா அவர்கள் சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்க்கரை நோய் மருத்துவ நிபுணர் ஆவார். மருத்துவம் சார்ந்த இவரது பணிக்காக இந்த 2022 ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

இந்தியாவின் உயரிய விருது
தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement