63 Nayanmars Names List in Tamil:நாயன்மார்கள் என்பவர்கள் கி.பி 400-1000 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்களில்சிலர். நாயன்மார்கள் என்போர் பெரிய புராணத்தில் கூறப்பட்ள்ள 63 சிவனடியார்கள் ஆவார்கள். நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். சுந்தரமூர்த்தி நாயன்மார் என்பவர் திருத்தொண்டத் தொகையில் 62 நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார். அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்தி மூவரின் வரலாற்றை ”திருத்தொண்டர் புராணம்” என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மார்களுக்கு சிவாலயங்களின் சுற்றுப்பிரகாரத்தினுள் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். மூவர் சிலைகள் வைக்க முடியாத சிறிய சிவாலயங்களில் ”நால்வர்” என்றழைக்கப்படும் “அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், திருஞானசம்பந்தரின்” உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கும். இந்த நால்வரையும் “சைவ சமய குரவர்” என்று அழைக்கப்படுகின்றனர். சரி இப்போது 63 நாயன்மார்களின் (63 nayanmars) பெயர்கள், நாடு, பூசை நாள் பற்றி தெரிந்துக்கொள்ளுவோம்..!