Ajwain in Tamil
வணக்கம் 🙏 நண்பர்களே இன்று நம் பொதுநலம். காம் பதிவில் ஓமத்தை பற்றிய சில முக்கியமான தகவல்களை தான் தெரிந்துகொள்ளப் போகிறோம். நம் அன்றாட உணவுகளில் எடுத்துக்கொள்ளும் மருந்துகளை பற்றி தெரிந்துகொண்டு அதன் பிறகு சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த ஓமம் ஆனது பல மருத்துவங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இவை எந்த வகை தாவரங்கள் என்பதை பற்றியும், இவற்றால் ஏற்படும் பயன்பாடுகள் பற்றியும் நம் பதிவின் மூலம் படித்து அறியலாம் வாங்க.
ஆளிவிதை சாப்பிடுபவர்களா நீங்கள்? முதலில் இதை பற்றி தெரிந்துகொண்டு சாப்பிடுங்கள் |
ஓமம் எந்த வகை தாவரத்தை சேர்ந்தது?
இந்த ஓமம் ஆனது பூக்கும் தாவரத்தை சேர்ந்தது, இது ஒரு இருவித்திலைத் தாவரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவை Apiaceae என்னும் குடும்பத்தை சார்ந்தது. இந்த செடியின் உயரமானது சுமார் ஒரு மீட்டர் வரையும் வளர்ச்சியடைகிறது. இவை சிறகுகள் போன்ற மெலிந்த இலைகளான நீண்ட காம்புகளின் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீளமாக வளர்ந்திருக்கும். இந்த செடியின் காய்கள் வாசனைகள் நிறைந்து காணப்படும். இந்த ஓமம் ஆனது மூலிகை மருத்துவத்திற்கு பயன்படும் செடியாகும். இவற்றை விற்பதற்காக பயிரிடப்பட்டு வருகிறது.
ஓமத்தின் மருத்துவ குணங்கள்:
ஓமத்திலும், அந்த ஓமத்தை நீரில் ஊறவைத்து குடிக்கும் தண்ணீரிலும் அதிகமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. சளி பிரச்சனைகளான மூக்கு அடைப்பு, வறட்டு இருமல், தும்மல் போன்ற பிரச்சனைகளுக்கு இவை சிறந்த மருத்துவ பயனுள்ளதாக இருக்கிறது. உடலில் ஏற்படும் வலிகளுக்கு நிவாரணங்களுக்காகவும், பசியை தூண்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அதோடு மட்டுமன்றி வயிற்று பொருமல், வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஓமத்தை நீரில் கொத்திக்கவைத்து அதில் பனைவெல்லம் சேர்த்து காலை நேரங்களில் குடித்து வருவதால் உடலை பலப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது. மேலும் இவை மாதவிடாய் சுழற்சியை சரி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
ஓமத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்:
ஓமத்தில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளது, கால்சியம், இரும்புசத்து, பாஸ்பரஸ், கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் அதிகமாவே நிறைந்துள்ளதால் இவற்றை எல்லாவிதமான பிரச்சனைகளையும் சரி செய்வதற்காக உதவியாக இருக்கிறது.
ஓமத்தின் பயன்கள் என்ன?
ஓமத்தின் விதைகளும் அதன் இலைகளும் சித்த மருத்துவத்திற்கும், ஆயுர்வேத மருத்துவத்திற்கும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை இந்தியாவில் அதிகமாக பயிரிடப்பட்டு வரும் மூலிகை செடியாகும். இந்த தாவரத்தை கொண்டு வெதுப்பி, அணிச்சல் போன்றவற்றை தயாரிப்பதற்காகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி இவை மதுபான வகைகளுக்கு வாசனையாக இருப்பதற்காகவும் அதிகமாவே பயன்படுத்தாதபட்டு வருகிறது.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |