விலங்குகள் கனவில் வந்தால் என்ன பலன் | Kanavil Vilangugal Vanthal Enna Palan
Animals Kanavu Palangal in Tamil: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பொதுநலம்.காம்-ல் கனவில் விலங்குகள் வந்தால் என்ன பலன் என்று தெரிந்துக்கொள்ளலாம். கனவு என்பது நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது நம்மளுடைய செயல்திறனை அறியாமல் வருவதே கனவாகும். அப்படிப்பட்ட ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் இருக்கும் என்று முன்னோர்கள் கூறுவார்கள். உலகில் கனவு காணாத மனிதர்களே இல்லை எனலாம். கனவு வருவது என்பது ஒவ்வொரு மனிதருடைய இயல்பு. நாம் காணும் கனவுகள் அனைத்திற்கும் ஒரு காரணம் மட்டுமில்லை, பல காரணங்கள் உள்ளன. பொதுவாக நாம் காணும் கனவுகள் நமக்கு பின்னாளில் நடக்க போவதை முன்கூட்டியே தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே நம் பதிவின் வாயிலாக தினமும் ஒரு கனவு பலன்களை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் கனவில் எந்த வகையான விலங்குகளை கண்டால் என்ன பலன் என்று இந்த பதிவு மூலம் உங்களுக்கு அப்டேட் செய்கிறோம்.
புலி, சிங்கம் வேட்டையாடுவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:

புலி, சிங்கம் போன்ற விலங்குகளை நாம் வேட்டையாடி வெற்றி அடைவது போன்று கனவில் வந்தால் நமக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து வெற்றி பெறப்போகிறோம் என்று அர்த்தமாகும்.
புலி கனவு பலன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉Kanavil Puli Vanthal Palan in Tamil
முயல் கனவில் வந்தால் என்ன பலன்:
நம் கனவில் முயல்கள் துள்ளிக்குதித்து விளையாடுவது போன்று வந்தால் நம்முடைய சொந்த ஊருக்கு சென்று உறவினர்களை பார்க்கப்போகிறோம் என்று அர்த்தமாகும். இல்லையென்றால் உறவினர்கள் நம்மளை பார்க்க வரப்போகிறார்கள் என்று இந்த கனவானது நமக்கு கூறுகிறது.
நரி கனவில் வந்தால் என்ன பலன்:
தங்களுடைய கனவில் நரி வந்தால் நாம் இருக்கும் சொந்த ஊரினை விட்டு வேறு ஊருக்கு சென்று தொழில் செய்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.
குதிரை கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் குதிரை வந்தால் வழக்கு விஷயங்களில் தோல்வி நீங்கி வெற்றி கிடைக்கும்.
குதிரை மேல் சவாரி செய்வது போல் கனவு வந்தால் என்ன பலன்:
குதிரை மீது சவாரி செய்வது போல் கனவு கண்டால் வெளிநாடு செல்வதற்கு வாய்ப்பு உண்டாகும்.
குதிரை கனவு பலன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉Kuthirai Kanavu Palangal in Tamil
பசு மேய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்:
பசுக்கள் நிலத்தில் மேய்வது போல் கனவில் வந்தால் புதிதாக சொத்து வாங்க போகிறோம் என்று அர்த்தமாகும்.
பசு மாடு கனவு பலன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉Kanavil Pasu Madu Vanthal Enna Palan
காளை மாடு துரத்துவது போல் கனவில் வந்தால் என்ன பலன்:
கனவில் காளை மாடு உங்களை துரத்துவது போல் வந்தால் தேவையில்லாமல் வீண் பிரச்சனைகள் வந்து போகும்.
ஆடு கனவில் வந்தால் என்ன பலன்:
ஆடுகளை நம் கனவில் கண்டால் புதியதாக கார் அல்லது பைக் வாங்க போகிறோம் என்று இந்த கனவு பலனானது நமக்கு கூறுகிறது.
பாம்பு கனவில் வந்தால் என்ன பலன்:
நம்முடைய கனவில் வந்தால் பாம்பு வந்தால் நமக்கு தொல்லை தந்து வந்த கடன் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
பாம்பு கனவு பலன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉Periya Pambu Kanavil Vanthal
யானை கனவில் வந்தால் என்ன பலன்:

உங்கள் கனவில் யானை வந்தால், எதோ ஒரு வகையில் உங்களுக்கு செல்வம் வர போகிறது என்று அர்த்தம்.
யானை மீது உட்காந்து சவாரி செய்வது போல் கனவு கண்டால், உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக வீடு வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
யானை கனவு பலன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉Kanavil Yanai Vanthal
குரங்கு கனவில் வந்தால் என்ன பலன்:

உங்கள் கனவில் குரங்கு வந்தால், நீங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் அல்லது உங்கள் நண்பர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபடுவீர்கள். கடன் பிரச்சனை அதிகரிக்கும்.
நாய் கனவில் வந்தால் என்ன பலன்:

உங்கள் கனவில் நாய் வந்தால் உங்கள் மேல் வீண்பழி வந்து சேரும்.
நாய் கனவு பலன்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்👉Dog Dreams in Tamil
மான் கனவில் வந்தால் என்ன பலன்:

- உங்கள் கனவில் மான் வந்தால் உங்களுக்கு புகழ் மற்றும் செல்வம் அதிகரிக்கும் என்று அர்த்தம்.
- பெண்கள் மானை கனவில் கண்டால் நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க விரும்புகிறீர்கள் என்று அர்த்தம்.
- உங்கள் வீட்டில் நீங்கள் மானை பார்த்தால் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்க போகிறது என்றும் பணிக்கான ஊதியம் கிடைக்கும் என்றும் அர்த்தம்.
- மான் கூட்டமாக இருப்பதை கனவில் கண்டால் வாழ்வில் உங்களுக்கு இருக்கும் கஷ்டங்கள் நீங்கி எதிர்காலத்தில் நீங்கள் சந்தோசமாக இருக்க போகிறீர்கள் என்று அர்த்தம். செயல்கள் அனைத்தும் உங்கள் விருப்பம்படி நடக்கும் என்றும் அர்த்தம்.
- மான் ஓடி வருவதுபோல் கனவு கண்டால் நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல விஷயங்கள் நடக்கும் என்று அர்த்தம்.
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |









