எறும்புகள் பற்றிய ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

எறும்புகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஹலோ நண்பர்களே. பொதுநலம்.காமின் இனிமையான நேயர்களே. இன்று நம் பதிவில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். அப்படி என்ன தகவல் என்று தானே யோசிக்கிறீர்கள். இந்த பதிவை படித்து அது என்ன தகவல் என்பதை தெரிந்துகொள்வோம் வாங்க. இன்று நாம் சோம்பேறிகளுக்கு ஒரு உதாரணமாக இருக்கக்கூடிய எறும்புகள் பற்றிய ரகசியங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஒற்றுமையாக வாழும் எறும்புகளின் குணங்கள் மற்றும் அவை என்னென்ன தன்மைகளை கொண்டுள்ளது. அதனுடைய உலகம் எப்படி இருக்கும் என்று தான் நாம் தெரிந்துகொள்ள போகிறோம்.

எறும்புகள் பற்றிய தகவல்கள்:

எறும்புகள் பற்றிய தகவல்கள்

நாம் இருக்கும் உலகத்தில் பல உயிரினங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த உலகம் முழுவதும் வாழும் உயிரினங்கள் அதிகம் உள்ளன. இந்த உயிரினங்களில் ஓன்று தான் எறும்பு. நாம் அன்றாடம் பார்க்கக்கூடிய நமது கால்களுக்கு அடியில் வாழக்கூடிய உயிரினம் தான் எறும்பு. நாம் வாழும் உலகத்துடன் ஒப்பிடும் போது எறும்புகளின் உலகம் மிக சிறியது. எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா அதனுடைய உலகம் எப்படி இருக்கும் என்று. எறும்புகள் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எறும்புகள் கட்டியிருக்கும் புற்றுகளுக்கு அடியில் ஒரு சிட்டியே இருக்கும் என்று எறும்பு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.  இந்த உலகத்தில் 10,000-ல் இருந்து 12,000 வகையான எறும்புகள் இருக்கிறது. சாதாரணமான எறும்புகள் 90 நாட்கள் உயிர்வாழ்கின்றன. அறிவியல் ஆய்வின்படி கருப்பு பெண் எறும்புகள் சுமார் 15 ஆண்டுகள் வரை உயிர்வாழும் என்று கூறப்பட்டுள்ளது.

பறவைகள் மற்றும் விலங்குகளின் ஒலிகள்

எறும்புகளின் திறமைகள்:

எறும்புகளின் திறமைகள்

 • எறும்புகள் மனிதனை விட பல மடங்கு பலம் கொண்டவை. எறும்புகள் தன்னுடைய எடையை விட 20 லிருந்து 50 மடங்கு அதிகளவு எடையை தூக்கக்கூடியது.
 • எறும்புகள் சண்டையிடும் போது அவைகள் இறக்கும் வரை சண்டைகளை  நிறுத்துவதில்லை.
 • எறும்புகளுக்கு 2 வயிறுகள் இருக்கும். ஓன்று அது சாப்பிடும் உணவு. மற்றொன்று மற்ற எறும்புகளுக்காக சேமித்த உணவு.
 • எறும்புகள் பல்வேறு அளவுகளில் உள்ளது. சில எறும்புகளை பூதக் கண்ணாடியில் தான் பார்க்க முடியும்.
 • எறும்புகள் எப்பொழுதும் தனித்து வாழாது. கூட்டம் கூட்டமாக தான் வாழும்.
 • சில எறும்புகள் சொந்த இனப்பெருக்கம் செய்யக்கூடியவை.
 • சில எறும்புகள் நீரில் வாழும் தன்மை கொண்டுள்ளது. பொதுவாக நீருக்கு அடியில் 4 மணிநேரம் உயிர்வாழும் தன்மையை கொண்டுள்ளது. ஒரு சில எறும்புகள் தண்ணீருக்கு மேல் மிதக்கும் தன்மையை கொண்டுள்ளது.
 • எறும்புகள் தனக்கு தேவையான உணவுகளை விவசாயம் செய்யக்கூடியது. ஓன்று சேர்ந்து வாழும் தன்மையை கொண்டது.
 • எறும்புகளிடம் நுகரும் திறன் மனிதர்களை விட அதிகம் உள்ளது.
 • எறும்புகளின் சிறிய உடல் அமைப்பே அதன் வலிமைக்கு காரணமாகிறது. எறும்புகளின் உடல் பெரிய குறுக்குவெட்டு பகுதிகளை கொண்டுள்ளது. எனவே அவை வலுவானதாக உள்ளது.
 • எறும்புகள் ஒற்றுமையாக வாழும் திறனை கொண்டு பல வேலைகளை செய்து முடிகின்றன. எறும்புகளின் ஒற்றுமையே அதன் பலமாக உள்ளது.
விலங்குகள் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்

எறும்புகள் எவ்வாறு சுவாசிக்கின்றன:

எறும்புகள்

எறும்புகளின் உடலில் சுவாச அமைப்புகள் கிடையாது. இதற்கு பதிலாக எறும்புகளின் உடலை சுற்றி ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவும் சுவாச வழிகள் உள்ளன. மேலும் அதன் உடலில் அமைந்துள்ள துளைகளான சுழல்களின் மூலம் சுவாசிக்கிறது. இந்த சுழல்களின் மூலம் ஒவ்வொரு காலத்திற்கும் ஆக்ஸிஜனை விநியோகிக்கிறது.

எறும்புகளுக்கு கேட்கும் திறன் உண்டா?

எறும்புகளுக்கு காதுகள் கிடையாது. எறும்புகளால் கேட்க முடியாது என்று அர்த்தம் இல்லை. நடக்கும் போது ஏற்படக்கூடிய அதிர்வுகள் அல்லது நிலத்தின் அதிர்வை கொண்டு பொருட்களை அறிந்துகொள்கின்றன. எறும்புகளின் முழங்காலுக்கு கீழ் அமைந்துள்ள துணை உறுப்புகள் காரணமாக இவை அதிர்வை உணர செய்கின்றன.

குறிப்பு: மேலே படித்ததை போல நாமும் சுறுசுறுப்பாகவும் நமக்குள் ஒற்றுமையாகவும் இருப்பது எப்படி என்று எறும்புகள் மூலம் தெரிந்துகொண்டோம். 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.Com