பேக்கிங் சோடா பயன்கள்..! Baking Soda Uses in Tamil..!

Advertisement

Baking Soda Uses in Tamil..!

அனைவரது சமையலறையும் இருக்கின்ற ஒரு பொருள் தான் பேக்கிங் சோடா, இந்த பேக்கிங் சோடா உடலுக்கு கெடுதல் என பலபேர் சொல்வதும் உண்டு. இருந்தாலும் இந்த பேக்கிங் சோடாவை சமையலுக்கு எப்பயாவது ஒரு முறை தான் நாம் பயன்படுத்துவோம். மத்தபடி நாம் அதனை அதிகளவு பயன்படுத்தமாட்டோம். எனவே உங்கள் வீட்டு சமையலறையில் உறங்கிக்கொண்டிருக்கும் இந்த பேக்கிங் சோடாவை பயன்படுத்தி அழகு குறிப்பு மற்றும் வீட்டு குறிப்பு சிலவற்றை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பேக்கிங் சோடாவின் நன்மை தரும் விதத்தில் எப்படி பயன்படுத்துவது, அதனால் என்ன பலன்? என இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Baking Soda Uses: 1 

பாதம்

சிலருக்கு பாதங்கள் மிகவும் கருமையாகவும், அழுக்காகவும் காணப்படும். அப்படிபட்டவர்கள் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள், அவற்றில் பாதியளவு தண்ணீர் நிரப்பி மூன்று அல்லது நான்கு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் உங்கள் பாதங்களை இந்த நீரில் 5 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின் கால்களை சுத்தமாக தேய்த்து கழுவுங்கள். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர கால்களில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் நீங்கி பாதங்கள் அழகாக காணப்படும்.

Baking Soda Uses: 2

வியர்வை

ஆண்களுக்கு பொதுவாக அதிகமாக வியர்வை வரும். இதனால் அதிக துர்நாற்றமும் வரும். எனவே இந்த பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபட ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

பின் தங்கள் அக்குள் பகுதியில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இவ்வாறு ஸ்ப்ரே செய்வதினால் அதிகம் வியர்வை ஏற்படுவது தடுக்கின்றது. மேலும் வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றமும் தடுக்கப்படுகிறது.

Baking Soda Uses: 3

கூந்தல்

பொதுவாக நிறைய கூந்தல் உள்ள பெண்களுக்கு முடி எப்பொழுதும் பிசு பிசுப்பாக எண்ணெய் பசையாக இருக்கும். எனவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட தலை அலசும் பொழுது ஷாம்புடன் சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து தலைக்கு பயன்படுத்துங்கள். இவ்வாறு செய்வதினால் தலைமுடியானது மிகவும் மென்மையாகவும், சைனிங்காகவும் காணப்படும்.

Baking Soda Uses: 4

தேனீ

தேனீ கடிக்கு பேக்கிங் சோடா ஒரு சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது. எனவே எதிர்பாராத விதமாக எப்பயாவது தங்களை தேனீ கடித்துவிட்டது என்றால், அப்போது சிறிதளவு தண்ணீரில் பேக்கிங் சோடாவை கலந்து தேனீ கடித்த இடத்தில் நான்றாக அப்ளை செய்யுங்கள். இவ்வாறு செய்வதினால் ஒரு நாள் நிவாரணம் கிடைக்கும்.

Baking Soda Uses in Tamil: 5

செரிமான பிரச்சனை

செரிமான பிரச்சனைக்கு பேக்கிங் சோடா ஒரு நல்ல நிவாரணமாக அமைகின்றது. எனவே செரிமான பிரச்சனை உள்ளவர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, பிறகு அருந்துங்கள் இவ்வாறு இந்த பானத்தை அருந்துவதனால் செரிமான பிரச்சனை உடனே சரியாகிவிடும்.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement