Butterfly Pea Flower in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! நீங்கள் தினமும் எங்கள் பதிவின் மூலம் பயனுள்ள தகவல்களை படித்து பயன்பெற்று வருகிறீர்கள். அந்த வகையில் இன்று சங்கு பூ பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள். அதற்கு முன் உங்கள் வீட்டில் சங்கு பூ இருக்கிறதா..? அப்படியென்றால் அதில் இருக்கும் நன்மைகள் உங்களுக்கு தெரியும். தெரியவில்லை என்றால் அதையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
சங்கு பூ பற்றிய தகவல்கள்:
பொதுவாக நம் அனைவருக்குமே சங்கு பூ எப்படி இருக்கும் என்று தெரியும். அதாவது நாம் அனைவருமே சங்கு பூவை பார்த்திருப்போம் என்று சொல்கிறேன்.
இந்த சங்கு பூவை Clitoria Ternatea என்றும் அழைப்பார்கள். இது ஃபேபேசி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வற்றாத மூலிகை தாவரமாகும். அதாவது இந்தோனேசியாவின் டெர்னேட் தீவைச் சேர்ந்த ஃபேபேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவர இனமாக சங்கு பூ இருக்கிறது.
கருப்பு பீன்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா..
அதுபோல இந்த சங்கு பூ Asian pigeonwings, Bluebellvine, Blue Pea, Butterfly Pea, Cordofan Pea மற்றும் Darwin Pea என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது ஒரு அலங்காரச் செடியாகவும், ஒரு தாவர இனமாகவும் வளர்க்கப்படுகிறது.
இந்த பூக்கள் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இடங்கள் உட்பட பூமத்திய ரேகை ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டது. ஆனால் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்பாசியை உணவில் சேர்த்து கொள்வதற்கு முன்னால் இதை கண்டிப்பாக தெரிஞ்சிகோங்க |
வளரும் தன்மை:
இந்த சங்கு பூ நீள்வட்ட, மழுங்கிய இலைகளைக் கொண்ட வற்றாத மூலிகைத் தாவரமாகும். இது ஒரு கொடியாக வளரும் தாவரம். ஈரமான அல்லது நடுநிலை மண்ணில் நன்றாக வளரும் தன்மை கொண்டது.
அதுபோல இந்த சங்கு பூக்கள் நீலம் தனித்த, வெளிர் மஞ்சள் நிறம், வெள்ளை நிற பூக்கள் போன்ற நிறங்களில் காணப்படுகிறது. சங்கு பூக்கள் சுமார் 4 செமீ ( 1+1⁄2 அங்குலம்) 3 செமீ நீளம் ( 1+1⁄4 அங்குலம் ) அகலம் வரை வளர்கிறது.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்⇒ ரோஸ்மேரி பற்றிய தகவல் உங்களுக்கு தெரியுமா
சங்கு பூ பயன்கள்:
- ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள்
- மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கறது.
- கண் பார்வையை மேம்படுத்த உதவுகிறது.
- இனப்பெருக்க ஆரோக்கியம்
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகிறது.
- தலைமுடிக்கு வலிமையை தருகிறது.
- உணவு விரைவில் செரிமானமாக உதவுகிறது.
- சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- நோய்களை எதிர்த்துப் போராடுகிறது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |