Cat Dream Meaning in Tamil..!
Cat Kanavu Palangal in Tamil / Poonai Kanavil Vanthal – பொதுவாக பலரது வீட்டில் பூனையினை செல்ல பிராணியாக வளர்ப்பது உண்டு. அந்த பூனையை நம் கனவில் கண்டால் நல்லதா..? கெட்டதா..? அதற்கு என்ன பலன் என்று நாம் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக இருப்போம். நாம் எந்த கனவு கண்டாலும் அந்த கனவுக்கு என்ன பலன் என்று நாம் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறி அதனை தெரிந்து கொள்வோம். அந்த வகையில் இந்த பதிவில் பூனையை கனவில் கண்டால் என்ன பலன் என்று தெரிந்துக் கொள்ளலாம் வாங்க.
பூனை கனவில் வந்தால் நல்லதா கெட்டதா?
01 தாங்கள் பூனையால் தாக்கப்படுவது போல் கனவு கண்டால், தங்கள் வாழ்க்கையில் திட்டமிட்ட செயல்கள் நடைபெறவில்லை என்று அர்த்தமாகும்.
02 தங்கள் கனவில் ஒரு பூனை குட்டியை காப்பாற்றுவது போல் கனவு கண்டால் தங்கள் வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடைபெறும் என்று அர்த்தமாகும்.
03 உங்கள் கனவில் இரட்டை பூனைகளை கண்டால் தாங்கள் வேலை செய்யும் இடத்திலும், தங்கள் வீட்டிலேயும் சுமுகமான சூழல் ஏற்படும்.
04 தங்கள் கனவில் பூனைகளை கூட்டமாக கனவில் கண்டால் தாங்கள் செல்லும் இலக்குகளில் பல குழப்பமான சூழ்நிலைகள் மற்றும் மன அழுத்தத்தை அதிகமாக சந்திப்பீர்கள்.
05 திருமணம் ஆகாதவர் கனவில் பூனையை கண்டால் அவர்களுடைய உறவினர்களுடன் பல பிரச்சனைகள் ஏற்படும்.
06 தங்கள் கனவில் சுத்தமான மற்றும் அழகான பூனையை கண்டால் தங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.
07 கர்ப்பிணி பெண்கள் பூனையை கனவில் கண்டால், அழகான பெண் குழந்தையை பெற்றெடுப்பீர்கள் என்று அர்த்தமாகும்.
08 திருமணம் ஆன பெண் அவர்களுடைய கனவில் பூனையை கண்டால் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று அர்த்தமாகும். மேலும் அவர்களுடைய திருமண வாழ்க்கையில் அதிக பிரச்சனைகள் ஏற்படும்.
09 பூனையை பிடிப்பது போல் கனவில் கண்டால் உங்கள் வீட்டில் திருட்டு நடக்குமாம்.
10 பூனையை அடிப்பது போல் கனவு கண்டால் தங்களுடைய வாழ்க்கையில் தந்திரங்கள் மற்றும் மோசடி போன்ற பிரச்சனைகளிடமிருந்து தாங்கள் சிக்காமல் இருப்பீர்கள் என்று அர்த்தமாகும்.
குழந்தை கனவில் வந்தால் என்ன பலன்..! |
பூனை கனவில் வந்தால் | Poonai Kanavil Vanthal | Cat Dream Meaning in Tamil
11 அதேபோல் எந்த காரணமும் இல்லாமல் ஒரு பூனையை அடிப்பது போல் கனவு கண்டால் புதிய எதிரியை உருவாக்குகிறார்கள் என்று அர்த்தமாகும். எனவே வீண்விவாதங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
12 பூனையை தங்களுடன் வைத்துக் கொள்வது போல் கனவு கண்டால் தங்களுக்கு கூடிய சீக்கிரத்தில் நல்ல பணம் வரவு வர போவதாக அர்த்தமாகும்.
13 பெண்கள் தங்கள் கனவில் பூனையை கண்டால் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத விஷயங்களை சந்திக்க போவதாக அர்த்தமாகும். அது நல்ல விஷயமாக இருக்கலாம் அல்லது கெட்ட விஷயமாக கூட இருக்கலாம்.
14 அலறும் பூனைகளையோ அல்லது சத்தமிடும் பூனைகளை தங்கள் கனவில் கண்டால் நண்பர்கள் அல்லது தெரிந்தவர்களால் ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
15 சுத்தமில்லாத, பராமரிக்கப்படாத பூனையை தங்கள் கனவில் கண்டால் தங்கள் வீட்டில் செல்வம் குறைந்து கொண்டே செல்கிறது என்று அர்த்தமாகும்.
16 பூனை தங்களை கடிப்பது போல் கனவு கண்டால் தங்களை சுற்றி மோசமானவர்கள் இருப்பதாக அர்த்தம் அது தங்களுடைய நண்பர்களாக கூட இருக்கலாம். எனவே தங்கள் நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
17 பூனை தங்களை கடிக்க வருவது போல் கனவு கண்டால் தங்கள் தொழில் மற்றும் வேலையில் தங்களுக்கு இன்னொரு போட்டியாளர் வரப்போவதாக அர்த்தமாகும்.
18 இறந்த பூனையை தங்கள் கனவில் கண்டால் தாங்கள் ஏதோ ஒரு விஷயத்திற்கு அடிமையாக போவதை உணர்த்துகிறது.
19 பூனை, எலி அல்லது பறவையை பிடிப்பது போல் கனவு கண்டால் உங்கள் எதிரிகள் தங்களிடம் வெற்றி பெற மிகவும் போராடுவார்கள்.
20 பூனையும் பாம்பும் சேர்த்து இருப்பது போல் கனவு கண்டால் தாங்கள் யாரிடமாவது சண்டை போடப்போகிறீர்கள் என்று அர்த்தமாகும்.
கனவில் திருமணம் நடந்தால் என்ன பலன்..! |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |