சிதம்பர ரகசியம் என்றால் என்ன..? | Chidambara Ragasiyam Enral Enna

Advertisement

Chidambara Ragasiyam in Tamil

சிதம்பர ரகசியம் என்றால் என்ன இந்த வார்த்தையை வீட்டில் பெரியவர்கள் சொல்லி கேட்டிருப்போம். அதாவது இது என்ன சிதம்பர ரகசியமாக மறைக்க, சொல்லுங்க சத்தமாக என்று வீட்டில் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி என்ன இந்த சிதம்பர கோவிலில் உள்ளது. வாங்க அதனை பற்றி பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Chidambara Ragasiyam in Tamil:

இந்து சமய வேதங்களின் படி தை மாதம், குரு பூசம், பகல் நேரம் சிவபெருமான் தன்னுடைய 3000 பூதகனங்களுடன் பூமிக்கு வந்து பதஞ்சலி, வியாக்கிரபாதர் வேண்டுகோளுக்கு இணங்க தில்லையை செய்கிறார்.

அது எதற்கு என்றால் ஆனந்த தாண்டவமாக காட்சி தருவதற்காக தேர்வு செய்கிறார். கோவிலோடு கட்டமைப்புக்கு பின்பு அந்த 3000 பூதகனங்களில் 1 வரை மட்டும் காணவில்லை. 2,999 மட்டும் தான் இருந்தார்கள்.

அந்த தொலைந்து போன 1 பூதகனங்களை தேடுகிறார்கள். அப்போது ஒருவர் மூலம் அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை. யானே நடராஜன் என்று சொல்வதை கேட்டதாக வரலாறு சொல்கிறது.

 what is chidambara ragasiyam in tamil

இந்த சிதம்பரநாதர் கோவில் தெற்கு கோபுரம் பாண்டியர்களாலும், கிழக்கு கோபுரம் சோழர்களால் கட்டப்பட்டுயிருக்கிறது. அந்த காலத்தில் ஆட்சி மாறி மாறி வந்தாலும் இந்த கோவிலின் வேலைகள் மட்டும் தொடர்ந்து நடந்துள்ளது.

இந்த கோவில் கட்டப்பட்ட காலம் என்றால் 3000 வருடங்களுக்கு மேல். ஆனால் தொல்லியல் வரலாற்று தடையங்கள் மூலம் பார்த்தால் 3 ஆம் நூற்றாண்டுக்கு முன்புலிருந்து உள்ளது என்று சான்றுகள் உள்ளது.

சைவ சமயத்தின் படி இந்த கோவில் 5000 வருடங்களுக்கு பழைமையானது என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இது 1500 வருடங்கள் பழைமையானது என்று சாட்சிகள் தடையங்கள் உள்ளது.

சிதம்பரத்தில் மட்டும் தான் சிவபெருமாளை 3 உருவத்தில் பார்க்கமுடியும். ஒன்று விக்கிரக வழிபாடு, லிங்க வழிபாடு, ஆகாச வழிபாடு என்று சொல்லி நடராஜர் விக்ரகமாகவும, சந்திரமௌலீஸ்வரர் லிங்கமாகவும் அதேசமயம் சிதம்பர ரகசியம் என்று அழைக்கப்படக்கூடிய ஆகாச வழிபாடாகவும் வழிபட்டு வந்தார்கள்.

சிதம்பர ரகசியம் மட்டுமில்லாமல் சிதம்பரம், காளஹஸ்தி, காஞ்சிபுரம் கோவில்கள் அனைத்தும் புவியியலில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கிறது. அதாவது longitude line seventy nine degree forty one minute என ஒரே நேர்கோட்டில் இந்த மூன்று கோவில்களும் அமைந்துள்ளது. செயற்கை கோள் இல்லாத அந்த காலத்தில் ஒரே நேர்கோட்டில் கட்டுவது என்பது எவ்வளவு பெரிய விஷயம் ஆகும். அதாவது பிரம்மிப்பின் உச்சக்கட்டம்.

சிதம்பர நடராஜர் கோவில் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு 9 வாயில்கள் உள்ளது. இந்த 9 வாயில்கள் என்பது மனித உடலில் இருக்கக்கூடிய 9 துளைகளை வெளிப்படுத்துகிறது. அதேபோல் நடராஜர் சன்னதி மனித இதயத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

மனித இதயம் இடப்பக்கம் அமைத்திருக்கும் சொல்வார்கள். அதேபோல் கருவரையில் இடப்பக்கம் அமைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதேபோல் மனிதனுடன் இது எவ்வளவு ஒத்து அமைந்துள்ளது என்பதை விளக்கும் விதமாக இதயத்தில் உள்ள நரம்புகள் நேராக செல்லாமல் இடது வலது பக்கம் தான் செல்லும். இங்கு இருக்கும் கருவறையும் அதனை ஒத்து தான் கட்டப்பட்டிருக்கும்.

 சிதம்பரம் நடராஜர் கோவில் அதிசயங்கள்

அந்த கோவில் சபாவில் 21,600 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளுக்கு ஒரு மனிதன் சுவாசிக்க கூடிய எண்ணிக்கை. அதாவது ஒரு நிமிடத்திற்கு 15 எண்ணிக்கை என்றால் 15*60*24 = 21,600 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த 21,600 தங்க ஓடுகளும் 65,000 ஆணிகள் மூலம் பதிக்கப்பட்டுள்ளது. இது மனித உடலில் இருக்க கூடிய நாடிகளின் எண்ணிக்கையை குறிக்கிறது.

இந்த கோவிலை பற்றி நிறைய வியக்கவைக்கும் தகவல் இருந்தாலும் விஞ்ஞானிகளின் பார்வை கோவில் பக்கம் திருப்பிய பின்பு இந்த கோவிலை பற்றி சில விஷயங்களை அவர்கள் முன் வைத்தார்கள்.

இந்த கோவில் அமைத்திருக்கும் இந்த இடம் தான் காந்த சக்திக்கு மைய பகுதியாம்.  அதாவது Magnetic lines zero என்று இருக்கக்கூடிய ஒரே இடம் சிதம்பரம் ஆகும்.

 Chidambara Ragasiyam in Tamil

கோவில் அமைத்திருக்கும் இந்த இடம் காந்த கதிர்விச்சுகளுக்கு மையமாக உள்ளது. COSMIC என்ற சொல்லக்கூடிய பிராண துகள்களால் தான் இந்த உலகமே இயங்குகிறது. உலகம் சுழலுவதற்கு சக்தியை கொடுப்பது Cosmic crush தான். இந்த Cosmic Crush உலகத்திற்கு வந்து வெளியாகவும் பகுதியாக உள்ளது சிதம்பரம். இப்படி பட்ட விஷயத்தை 4000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கிறது.

இந்த நடராஜர் சிலையானது வெறும் மதமாக இல்லாமல், ஒரு அறிவியல் வெளிப்பாடாக உள்ளது. இந்த உலகம் எப்படி உருவானது என்று சொல்லக்கூடிய Formula போல் உள்ளது. அது என்ன பார்க்கலாம்.

Model Science -ல இது ஒரு பெரிய புரட்சியை உருவாக்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

 chidambara ragasiyam enral enna

அதாவது 1972 ஆம் ஆண்டு விஞ்ஞானி Fritjof Capra எழுதிய Tao of Physics புத்தத்தில் இந்த நடராஜர் சிலையை பற்றி தெளிவாக எழுதியிருப்பார்கள்.

Cern Researchஉலகத்தில் உள்ள தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனம் என்று சொல்லக்கூடிய Cern Research நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் Switzerland -ல் உள்ளது. கிட்டத்தட்ட 27 கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனத்தின் வாசலில் நடராஜர் சிலை உள்ளது.

எதற்காக இந்த நடராஜர் சிலையை வாசலில் உள்ளது என்ற பதிலும் அந்த சிலைக்கு கீழ் பொறிக்கப்பட்டுள்ளது. அதாவது காலத்தால் சொல்ல முடியாத பதில் இந்த நடராஜர் சிலையில் உள்ளது என்று பொறிக்கப்பட்டுள்ளது.

நடராஜர் சிலையினுடைய அமைப்பு இந்த பிரபஞ்சத்தை வெளிப்படுத்துகிறது.  அவரை சுற்றி இருக்கும் வளைவு இந்த பிரபஞ்சத்தை, அதில் பதிக்கப்பட்டுள்ள நெருப்பு பிரபஞ்சத்தை  விரிவடைந்துகொண்டு தான் இருக்கும் என்று வெளிப்படுத்துகிறது.

MILKY WAY

இதற்கு இடையில் அமைத்திருக்கும் நடராஜர் வடிவம் வலது கையிலிருந்து இடது கால் வரை, MILKY WAY என்று அழைக்கப்படக்கூடிய பால் வலிகளின் வடிவத்தை, இவர் தலையிலிருந்து கால் வரை Cosmic Crush இந்த MILKY WAY கடந்து செல்வதை வெளிப்படுத்துகிறது.

நடராஜர் இதயம் அமைத்திருக்கும் இடம் தான் நாம் வாழும் சூரிய குடும்பமாக சோலார் சிஸ்டம் அமைத்துள்ளது.

நடராஜர் இடுப்பை சுற்றி நகரும் பாம்பு காலம் எப்போதும் நீக்காமல் ஓடிக்கொண்டு இருக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த பிரபஞ்ச அமைப்பை தான் மேற்கு நாட்டு விஞ்ஞானிகள் BIG bank theory மூலம் நிரூபித்துள்ளார்கள். இப்போது பார்த்த அனைத்தும் சிதம்பர ரகசியத்தின் 50 சதவீதம் கூட இல்லை.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement