Debt Fund in Tamil
வணக்கம் அன்பான நண்பர்களே… இன்றைய பதிவில் டெப்ட் ஃபண்ட் பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ள போகிறோம். மியூச்சுவல் ஃபண்ட் என்பது நாம் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பணத்தை பாதுகாப்பான முறையில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். இந்த மியூச்சுவல் ஃபண்ட் -யை ஒரு பாதுகாப்பு மற்றும் நல்ல சேமிப்பை தரும் ஒரு முதலீட்டு முறை என்று கூறலாம். மியூச்சுவல் ஃபண்ட்டில் பல வகையான திட்டங்கள் உள்ளன. அந்த திட்டங்களில் ஓன்று தான் டெப்ட் ஃபண்ட்கள். நாம் இன்று இந்த பதிவின் மூலம் டெப்ட் ஃபண்ட்கள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு எங்கு தொடங்குவது..?
டெப்ட் ஃபண்ட் என்றால் என்ன..?
Debt Fund என்பது தமிழில் கடன் நிதி என்று சொல்லப்படுகிறது. டெப்ட் ஃபண்ட் என்பது பல முதலீட்டாளர்களின் நிதியை ஒருங்கிணைத்து பத்திரங்கள் அல்லது அரசு செக்யூரிட்டி, கஜானா பில்கள் போன்றவற்றில் முதலீடு செய்யப்படும் ஒரு முதலீட்டு திட்டமாகும்.
அதாவது, இந்த டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்வதற்கு கார்ப்பரேட் மற்றும் அரசாங்க பத்திரங்கள் ஆகியவற்றில் முதலீடு செய்ய முடியும். இதனால் நீங்கள் நிலையான வருமானத்தை பெற முடியும்.
டெப்ட் ஃபண்டுகள் மூலம் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் இருந்து கடன் கருவியை வழங்குகிறது.
அதாவது கடன் கருவி என்பது கார்ப்பரேட் பத்திரங்கள், அரசுப் பத்திரங்கள், கருவூல பில்கள், வணிகத் தாள்கள் மற்றும் பிற பணச் சந்தை கருவிகள் போன்ற நிலையான பத்திரங்களில் டெப்ட் ஃபண்டுகள் மூலம் முதலீடு செய்ய முடியும்.
டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்யும்போது, வட்டி விகிதம் உயர்ந்தால் முதலீட்டின் மதிப்பு குறைய தொடங்கும். அதேபோல வட்டி விகிதம் குறையும் போது முதலீட்டின் மதிப்பு உயரும்.
டெப்ட் ஃபண்ட்கள் Income Funds அல்லது Bond Funds என்று அழைக்கப்படுகிறது. மற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் இருந்து டெப்ட் ஃபண்ட்கள் முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது.
டெப்ட் ஃபண்ட் சிறப்பம்சங்கள்:
நிலையான வருமானம், குறைந்த கட்டணம், அதிகளவு பணவரவு மற்றும் பாதுகாப்பு போன்றவை டெப்ட் பண்டுகளின் சிறப்பு அம்சம் ஆகும்.
- நிலையான வட்டி வருமானம் மற்றும் மூலதன மதிப்பும் இருப்பதால் தான் முதலீட்டாளர்கள் டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்கிறார்கள்.
- நீண்ட கால முதலீட்டை விரும்பும் முதலீட்டாளர்கள் மட்டுமே இந்த டெப்ட் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்.
- இந்த டெப்ட் ஃபண்ட்கள் குறைந்த ஏற்றம் இரக்கம் கொண்டவையாக உள்ளது.
- அதேபோல வங்கி டெபாசிட்களில் முதலீடு செய்வதை விட டெப்ட் ஃபண்ட்களில் முதலீடு செய்வது அதிக வருமானத்தை தருகிறது.
- டெப்ட் ஃபண்ட்களில் நாம் முதலீடு செய்யும் பணமானது நிலையான வட்டியை பெற்று தருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் கணக்கு எங்கு தொடங்குவது?
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |