கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றிற்கு இடையே உள்ள வேறுபாடு

Advertisement

Difference Between Credit Card and Debit Card in Tamil

பணப்பரிவர்த்தனை இப்போது சுலபமாகிவிட்டது. நமக்கு ஏதாவது ஒரு விதத்தில் பணத்தேவை இருந்து கொண்டு தான் இருக்கும், அந்த வகையில் நமக்கு பணம் விரைவாக கிடைப்பதற்கு டெபிட் கார்ட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகிறோம். பண பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கும், நம்முடைய பணத்தை பத்திரமாக பாதுகாத்து கொள்ளவும் இது பெரும்பாலும் உதவி வருகிறது. நாம் இந்த தொகுப்பில் டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்டுக்கான வித்தியாசங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

டெபிட் கார்டு என்றால் என்ன? (debit card):

Debit Card in Tamil

  • Debit Card in Tamil: நீங்கள் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கும் போது, உங்கள் வங்கி கணக்குடன் இணைத்த ஒரு கார்டு வழங்கப்படும். இந்த கார்டு தான் debit card எனப்படும்.
  • உங்கள் கணக்கில் இருக்கும் பணத்தை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வங்கிக்கு செல்லாமல் ATM-ல் எடுத்து கொள்ளலாம். வங்கி கணக்கில் பணம் இல்லையெனில் பண பரிவர்த்தனை debit card மூலம் செய்ய முடியாது.

டெபிட் கார்டு பயன்கள்:

  • இந்த டெபிட் கார்ட் மூலம் நீங்கள் நாள் முழுக்க வங்கியில் நிற்காமல் பணத்தை உடனடியாக எடுப்பதற்கு உதவியாக இருக்கும். பணத்தை கையில் வைத்திருப்பதை விட வங்கி கணக்கில் பணத்தை வைத்து உபயோகிப்பதன் திருட்டு பயமில்லாமல் இருக்கலாம்.
  • இதில் இருக்கும் பெரிய குறையாக உங்களது Pin நம்பரை பறிகொடுக்கும் பட்சத்தில் Online மோசடியாளர்களால் பணம் திருடப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே Pin நம்பரை யாருக்கும் பகிர வேண்டாம்.

கிரெடிட் கார்டு என்றால் என்ன? (credit card):

What is Credit Card in Tamil

  • What is Credit Card in Tamil: இந்த கார்டும் வங்கிகளில் இருந்து தான் பெறப்படுகிறது, ஆனால் கிரெடிட் கார்டு சற்று வித்தியாசமானது. இந்த கார்ட் வைத்திருப்பவர்களுக்கு வங்கி ஒரு குறிப்பிட்ட தொகையை உங்கள் வருமானத்தின் அடிப்படையில் கொடுக்கும்.
  • உதாரணத்திற்கு உங்கள் வங்கி கணக்கில் Rs.50,000/- இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த பணத்தை நீங்கள் எந்த தொகையும் செலுத்தாமல் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.
  • ஆனால் இந்த தொகையை நீங்கள் வங்கிக்கு மீண்டும் செலுத்தும் வரையில் குறிப்பிட்ட அளவு வட்டி கட்ட வேண்டும்.

கிரெடிட் கார்டு பயன்கள்:

  • Credit Card in Tamil: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏதாவது பொருள் வாங்கினால் அதை நீங்கள் மாதாந்திர தவணை மூலம் தொகையை திருப்பி செலுத்த முடியும். இந்த கார்டு மூலம் Cash Pack, Gift Vouchers etc.. போன்ற பலன்கள் கிடைக்கும்.
  • இந்த கார்டுக்கு உங்களுக்கு கிரெடிட் ஸ்கோர் வழங்கப்படும், வங்கியில் நிலுவை தொகையை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால் கிரெடிட் ஸ்கோர் மதிப்பு குறைக்கப்படும்.
kyc என்றால் என்ன?

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement